Vijayakanth: விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijayakanth: விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்

Vijayakanth: விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 12, 2024 09:51 AM IST

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சில நாட்களிலேயே சமூக வலை தள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே தற்போது பேசுபொருளாகி உள்ளது.

விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்
விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சில நாட்களிலேயே சமூக வலை தள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே தற்போது பேசுபொருளாகி உள்ளது.

தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28 ம் தேதி காலமானார். இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல், இன்று தீவுத்திடலில் வைக்கப்பட்டது. பின்னர், ஊர்வலமாக சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்குப் பொதுமக்கள் வழிநெடுக நின்று அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.அவரது உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அன்று உடல் நலைக்குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் டிசம்பர் 28 காலை 6.10 மணிக்கு பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.