தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Vijayakanths Death And Dmdk Leaders Express Grief By Shaving Their Heads Near Dindigul

Vijayakanth: விஜயகாந்த் மறைவு - திண்டுக்கல் அருகே மொட்டையடித்து துக்கத்தை வெளிப்படுத்திய தேமுதிக நிர்வாகிகள்

Marimuthu M HT Tamil
Dec 29, 2023 09:16 PM IST

விஜயகாந்த் மறைவால், திண்டுக்கல் அருகே மொட்டையடித்து துக்கத்தை வெளிப்படுத்திய தேமுதிக நிர்வாகிகளின் செயல் பலரையும் கலங்கச் செய்துள்ளது.

விஜயகாந்த் மறைவு - திண்டுக்கல் அருகே மொட்டையடித்து துக்கத்தை வெளிப்படுத்திய தேமுதிக நிர்வாகிகள்
விஜயகாந்த் மறைவு - திண்டுக்கல் அருகே மொட்டையடித்து துக்கத்தை வெளிப்படுத்திய தேமுதிக நிர்வாகிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அங்கு மரணமடைந்தார். இதையொட்டி இன்று(டிசம்பர் 29) சென்னையில் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்று விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் அதேபோல் திண்டுக்கல் மாவட்டம், கொசவப்பட்டியில் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் ஜான் கென்னடி, வீரக்குமார் ஆகியோர் தலைமையில் உருவப் படத்தை வைத்து பாடை கட்டி, இறுதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர். 

அதற்கு முன்னதாக தேமுதிக நிர்வாகிகள் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தினர். இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்