தவெக பூத் கமிட்டி: ’FRIENDS அந்த பக்கம் Wire போகுது..!’ கட்டுக்கடங்காத கூட்டத்தை கனிவான பேச்சால் கட்டுப்படுத்திய விஜய்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தவெக பூத் கமிட்டி: ’Friends அந்த பக்கம் Wire போகுது..!’ கட்டுக்கடங்காத கூட்டத்தை கனிவான பேச்சால் கட்டுப்படுத்திய விஜய்!

தவெக பூத் கமிட்டி: ’FRIENDS அந்த பக்கம் Wire போகுது..!’ கட்டுக்கடங்காத கூட்டத்தை கனிவான பேச்சால் கட்டுப்படுத்திய விஜய்!

Kathiravan V HT Tamil
Published Apr 26, 2025 05:54 PM IST

கோவையில் நடந்து வரும் தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தவெக தலைவர் விஜய் மைக் பிடித்து பேசி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்.

தவெக பூத் கமிட்டி: ’FRIENDS அந்த பக்கம் Wire போகுது..!’ கட்டுக்கடங்காத கூட்டத்தை கனிவான பேச்சால் கட்டுப்படுத்திய விஜய்!
தவெக பூத் கமிட்டி: ’FRIENDS அந்த பக்கம் Wire போகுது..!’ கட்டுக்கடங்காத கூட்டத்தை கனிவான பேச்சால் கட்டுப்படுத்திய விஜய்!

தவெக பூத் கமிட்டி கூட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் இன்று (ஏப்ரல் 26) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் கட்டுக்கடங்காத உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், தொண்டர்கள் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டு, கருத்தரங்க அரங்கை நோக்கி சென்றனர். இந்த சாலை பேரணி குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுத்த விஜய் தற்போது பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.

கொங்கு மண்டலத்தில் முதல் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து கட்டமைப்பு வைத்திருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக என்ற இருகட்சிகளை போன்றே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தவெக சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் இலக்காக உள்ளது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, வாக்குச்சாவடி முகவர்களுக்கு கருத்தரங்கங்கள் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது, இதில் முதல் கூட்டத்தை கொங்கு மண்டலத்தில் தவெக நடத்துகிறது. கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 வாக்குச்சாவடி முகவர்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்கின்றனர். இந்த கருத்தரங்கம் தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒரு பூத்துக்கு ஒரு ஆண் ஒரு பெண் தேர்வு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு, 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடுகள் நடத்துவதற்கு திட்டம் உள்ளதாக விஜய் அறிவித்த நிலையில் முதல் கட்டமாக கொங்கு மண்டலத்தில் பூத் கமிட்டி கூட்டத்தை நடத்துகிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டிலும் விஜய் பங்கேற்க உள்ளார்.

கூட்டத்தை ஒழுங்குபடுத்திய விஜய்

இக்கூட்டத்தில் பங்கேற்க தனியார் ஹோட்டலில் இருந்து புறப்பட்ட விஜய்க்கு தவெக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் மேடைக்கு விஜய் வந்தபோது கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. மின்சாத உபகரணங்கள் இருக்கும் பகுதியில் அதிக கூட்டம் கூடியதால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் மைக்கில் பேசி ஒழுங்கு செய்ய முயன்றனர். ஆனாலும் கூட்டம் கட்டுக்குள் வந்தபாடு இல்லை. இதை பார்த்த விஜய், மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார். "FRIENDS அந்த பக்கம் Wire போகுது.. உங்களோடு 2 ஹவர்ஸ் உங்களோடதான் இருக்கபோறேன்.கொஞ்சம் அப்டியே பின்னாடி போய்ட்டீங்கன்னா வசதியா இருக்கும். ஒரு சேப்டி ரீசனுக்காக சொல்றேன், கொஞ்சம் அண்டர்ஸ்டேண்ட் பண்ணிக்கோங்க" என விஜய் கேட்டுக் கொண்டார்.