TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tvk: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

Kathiravan V HT Tamil
Jan 24, 2025 05:39 PM IST

மொத்தமுள்ள 234 தொகுதிகளும் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மாவட்ட செயலாளர், மாவட்ட கழக இணை செயலாளர், மாவட்ட பொருளாளர், 2 மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர்

’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!
’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

தனியாக விஜய் நடத்திய ஆலோசனை

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வருகை தந்தார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரை தவிர்த்து விஜய் மற்றும் நேர்காணலை நடத்தி முடித்து உள்ளார்.  

மொத்தமுள்ள 234 தொகுதிகளும் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மாவட்ட செயலாளர், மாவட்ட கழக இணை செயலாளர், மாவட்ட பொருளாளர், 2 மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர். 

உங்கள நம்பிதான் இருக்கேன்!

புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் மற்றும் விஜய் கையெழுத்திட்டுள்ள சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ‘உங்களை நம்பிதான் கட்சியை தொடங்கி உள்ளேன். தொடர்ந்து விசுவாசமாக பணியாற்றுங்கள்’ என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 19 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 

தவெகவுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.