Velmurugan: ’ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தரும் அரசு, கம்யூனிஸ்ட் பேரணிக்கு அனுமதி மறுக்கிறது!’ வேல்முருகன் ஆவேசம்!
இதனை காவல்துறை மந்திரி சொல்லி காவல்துறை செய்வது போல் தெரியவில்லை. காவல்துறை மோசமாக நடந்து கொள்கிறது என தெரிவித்து உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தரும் காவல்துறை, கம்யூனிஸ்ட் பேரணிக்கு அனுமதி மறுக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான தி.வேல்முருகன் நேர்காணல் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தொகுதி வாரியாக ஆயிரம் முதல் ஐந்தாயிரம் வாக்குகள் வரை உள்ளது. கலைஞரிடம் இருந்த திறமை, இனி தமிழ்நாட்டில் யாருக்கும் இருக்காது. ஆனால், ஈழப்படுகொலை விவகாரத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. கலைஞருடன் எந்த நேரத்திலும் பேசலாம் என்ற நிலை இருந்தது. மாவட்டத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டு முதல் பொறியியல் கல்லூரியை கலைஞர்தான் அடிக்கல்நாட்டி எனது தொகுதியில் தொடங்கி வைத்தார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நான் விடுத்தேன்.
குடும்ப அரசியல் இல்லாத அரசியல் வேண்டும்!
தளபதி ஸ்டாலின் ஆட்சியில், தமிழருக்கான சட்டம் நிறைவேறி உள்ளது. தொழிலார் நேர வரையறை குறித்த சட்டம் வரும் போது, அவரிடம் கோரிக்கை விடுத்தேன். உடனே அதை அரசு ரத்து செய்தது. கேபினட் அமைச்சர் பதவிக்கு நிகரான தமிழ்நாடு அரசு உறுதி மொழிக் குழுவின் தலைவர் பதவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்து உள்ளார். லஞ்சம், குடும்ப வாரிசுகள் இல்லாமல் உண்மையாக ஒரு அரசியலை கட்டமைக்க வேண்டும்.
காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சட்டு!
மழை பாதிப்பின் போது சென்னையில் இருப்பவர்களுக்கு 6ஆயிரம் தந்ததை போன்று கடலூருக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் 2ஆயிரமாவது அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதை செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் சொன்னது, அவரது பார்வை. சில சட்டம் ஒழுங்கு காவல்துறை அதிகாரிகள் ஒரு சில இடங்களில் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். சீமான், சவுமியா அன்புமணியை கைது செய்து உள்ளார்கள்.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி உண்டு!
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கே அரசு அனுமதி தருகிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணிக்கு அனுமதி தராமல் அடாவடியாக நடந்து கொள்கிறார்கள். ஒரு சில காவல்துறை அதிகாரிகளே அப்படிதான் மக்களை அணுகுகிறார்கள். இதனை காவல்துறை மந்திரி சொல்லி காவல்துறை செய்வது போல் தெரியவில்லை. காவல்துறை மோசமாக நடந்து கொள்கிறது என தெரிவித்து உள்ளார்.
