‘அமைச்சருக்கு சிறுமலை வாழைப்பழம் கொடுத்து அனுமதி வாங்கினேன்’ திமுக எம்.எல்.ஏ., பரபரப்பு பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘அமைச்சருக்கு சிறுமலை வாழைப்பழம் கொடுத்து அனுமதி வாங்கினேன்’ திமுக எம்.எல்.ஏ., பரபரப்பு பேச்சு!

‘அமைச்சருக்கு சிறுமலை வாழைப்பழம் கொடுத்து அனுமதி வாங்கினேன்’ திமுக எம்.எல்.ஏ., பரபரப்பு பேச்சு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 19, 2024 02:48 PM IST

‘நான் உயர் நீதிமன்ற பதிவாளரை 2 முறை பார்த்து குஜிலியம்பாறைக்கு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது, தமிழகத்தில் 78 ஊர்களுக்கு நீதிமன்றம் தேவைப்படுகிறது, அதில் குஜிலியம்பாறை போன்ற சின்ன ஊருக்கு தர முடியாது என்று கூறினார்’

‘அமைச்சருக்கு சிறுமலை வாழைப்பழம் கொடுத்து அனுமதி வாங்கினேன்’ திமுக எம்.எல்.ஏ., பரபரப்பு பேச்சு!
‘அமைச்சருக்கு சிறுமலை வாழைப்பழம் கொடுத்து அனுமதி வாங்கினேன்’ திமுக எம்.எல்.ஏ., பரபரப்பு பேச்சு!

மறுத்த பதிவாளர்.. வழங்கிய அமைச்சர்

நான் உயர் நீதிமன்ற பதிவாளரை 2 முறை பார்த்து குஜிலியம்பாறைக்கு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது, தமிழகத்தில் 78 ஊர்களுக்கு நீதிமன்றம் தேவைப்படுகிறது, அதில் குஜிலியம்பாறை போன்ற சின்ன ஊருக்கு தர முடியாது என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் ரகுபதியிடம் திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழம் வாங்கி கொடுத்து, நடையாய் நடந்து, பட்டு வேஷ்டியை போட்டு எங்களால் முடிந்த காரியங்களை எல்லாம் செய்துதான் நீதிமன்றத்திற்கு அனுமதி வாங்கினோம் என்று பேசினார்.

இந்த சம்பவம் விழா மேடையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இருப்பினும், அமைச்சருக்கு வாழைப்பழத்தைக் கொடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றேன் என்று திமுக எம்.எல்.ஏ., பொதுவெளியில் பேசியிருப்பது, பேசும் பொருளாகவும் மாறியிருக்கிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.