VarunKumar IPS: ’திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால்!’ சீமான் பெயர் குறிப்பிடாமல் வருண்குமார் IPS விமர்சனம்!
தனது முகநூல் பக்கத்தில் வருண்குமார் ஐபிஎஸ் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ”கொஞ்சநஞ்சம் பேச்சா.... 😄 திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்... 😎” என தெரிவித்து உள்ளார்.

திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என டிஐஜி வருண்குமார் பதிவிட்டு உள்ளார்.
சீமான் - வருண்குமார் ஐபிஎஸ் இடையே கருத்து மோதல்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் ஆகியோர் இடையே கருத்து மோதல் நிலவி வருகின்றது. வருண்குமார் ஐபிஎஸ் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் வருண்குமார் ஐபிஎஸ் அளித்த பேட்டியில், சீமான் என்னை அவதூறாக பல இடங்களில் பேசினார்.
குறிப்பாக ஜாதியை குறிப்பிட்டும் பேசினார். நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் என் குடும்பத்தை அவதூறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்தார்கள் அதற்கு கூட சீமான் கண்டிக்கவில்லை. அவர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என மட்டும் சீமான் பேசி வந்தார். ஆனால் அவ்வாறு பதிவிட்டவர்களை கைது செய்த போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தான் அவர்களை பிணையில் எடுத்தனர்.
தொழிலதிபர் மூலம் தூது விட்ட சீமான்
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக எழுதி உள்ளார்கள் என கூறினால், அதற்கு கண்டிக்காமல் எங்கள் குறித்தும் அவ்வாறு பலர் எழுதியுள்ளார்கள் என்று மட்டும் சீமான் பேசி வந்தார். அதற்கு அவர் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவருக்கு சுயமரியாதை இல்லை, எனக்கு சுயமரியாத இருக்கிறது. எங்கள் குடும்பத்தினர் குறித்து பேசியதால் நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன்.
தற்போது சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அடுத்த கட்டமாக அவர் மீது சிவில் வழக்கு தொடரவிருக்கிறேன். நான் ஓய்வு பெற்றாலும் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவேன். வீட்டில் புலி, வெளியே எலி என்பார்கள்; அதுபோல சீமான் மைக் முன்பு பேசினால் புலி போல் பேசுவார், பேசியதெல்லாம் பேசிவிட்டு என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன், அவர் அதை செய்யவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.
வருண்குமார் ஐபிஎஸ் முகநூல் பதிவு
இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் வருண்குமார் ஐபிஎஸ் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ”கொஞ்சநஞ்சம் பேச்சா.... 😄 திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்... 😎” என தெரிவித்து உள்ளார்.
