ஜிப்மர் வேலை வாய்ப்பில் தமிழகம் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்-vaiko condemns union govt for nurses exam centres boycott in tamil nadu - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஜிப்மர் வேலை வாய்ப்பில் தமிழகம் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

ஜிப்மர் வேலை வாய்ப்பில் தமிழகம் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

Karthikeyan S HT Tamil
Aug 10, 2022 06:58 PM IST

ஜிப்மர் செவிலியர்கள் வேலை வாய்ப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

<p>ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ</p>
<p>ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ</p>

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், செவிலியர் காலிப் பணியிடங்களுக்காக 2022, ஜூலை 13 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.

அதன்படி 21.07.2022 முதல் 11.08.2022 அன்று வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் 28.07.2022 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்களை திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.

இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செவிலியர்கள் தேர்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்து உள்ளது. எனவே ஒன்றிய அரசால் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியர்கள் விண்ணப்பிக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதும் மையங்களை இணையதளத்தில் உடனடியாக இணைக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துகின்றேன்." என்று வைகோ கூறியுள்ளார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.