DMK Chairman Joins AIADMK: உசிலம்பட்டி நகராட்சி திமுக சேர்மன் அதிமுகவில் இணைவு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் அதிமுகவில் இணைந்தார்.
உசிலம்பட்டி திமுக நகரச் சேர்மன் மற்றும் திமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் திமுக சார்பாக போட்டியிட்டு சேர்மன் ஆனவர், சகுந்தலா. இவரது தலைமையில் உசிலம்பட்டி நகராட்சியில் திமுக பலம்பொருந்திய கட்சியாகத் திகழ்ந்தது. இந்நிலையில் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, சகுந்தலா இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவருடன் திமுக மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணிச்செயலாளரும் அவரது மகனுமான விஜயும் அதிமுகவில் இணைந்தார்.
மேலும், முன்னாள் திமுக செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, முன்னாள் உசிலம்பட்டி திமுக முன்னாள் நகர செயலாளர் தங்க மலைப்பாண்டி உள்ளிட்டோர் தி.மு.க-விருந்து விலகி ஆர்.வி.உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் செயல்பாடுகளால் அதிருப்தியான நிலையில், உசிலம்பட்டி திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், உசிலம்பட்டியில் திமுக பின்னடைவைச் சந்தித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9