சவுக்கு சங்கர் வீடு சூறை: 'பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?’ முதல்வருக்கு எல்.முருகன் சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சவுக்கு சங்கர் வீடு சூறை: 'பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?’ முதல்வருக்கு எல்.முருகன் சரமாரி கேள்வி!

சவுக்கு சங்கர் வீடு சூறை: 'பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?’ முதல்வருக்கு எல்.முருகன் சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Published Mar 24, 2025 04:02 PM IST

இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அறிக்கை விடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா? இதுதான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயக ஆட்சியா?

சவுக்கு சங்கர் வீடு சூறை: 'பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?’ முதல்வருக்கு எல்.முருகன் சரமாரி கேள்வி!
சவுக்கு சங்கர் வீடு சூறை: 'பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?’ முதல்வருக்கு எல்.முருகன் சரமாரி கேள்வி!

சவுக்கு சங்கர் வீடு சூறை

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது தாயார் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டில் புகுந்து சூறையாடியதாக வீடியோவை தனது ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை.” என பதிவிட்டு இருந்தார்.

செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாட்டு

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக்கும் திட்டத்தில் தரும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பினாமிகள் வாங்கியதாக பேசிய நேர்காணல் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் பினாமிகள். வாகனங்களை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தரும் பணத்தை தனியார் கம்பெனியில் முதலீடு செய்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் கொடுத்துவிட்டு மீத பணத்தை செல்வப்பெருந்தகை எடுத்துக் கொள்கிறார் என நான் குற்றம்சாட்டி இருந்தேன். இது தொடர்பான ஆதாரங்களை நான் காணொலியில் காண்பித்து இருந்தேன்.”

வீடு தாக்குதலின் பின்னணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் உள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார். “செல்வப்பெருந்தகை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களும் சேர்ந்து தூண்டிவிட்டுதான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். அருண் அவர்கள் செய்யும் முறைகேடுகளை நான் தொடர்ந்து பேசி வருகிறேன்” என அவர் கூறினார்.

இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில் திராவிட மாடல் என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த போலி திராவிட மாடல் திமுக அரசிற்கு எதிராக, அவர்கள் செய்யும் ஊழலையும், முறைகேடுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இந்த அராஜகப் போக்கை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

பழிவாங்கும் செயல்

இந்த திமுக ஆட்சியில், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழலை, தொடர்ந்து தனது சவுக்கு மீடியா மூலமாக வெளிக்கொணர்ந்து வருகின்ற திரு.சவுக்கு சங்கர் அவர்களது இல்லத்தில், அவர் இல்லாத சமயம் பார்த்து அத்துமீறி நுழைந்திருக்கும் கும்பல் மீது, காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பட்டமான பழிவாங்கல் செயலாகும்.

இதுதான் ஜனநாயக ஆட்சியா?

இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அறிக்கை விடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா? இதுதான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயக ஆட்சியா?

இன்று திரு.சவுக்கு சங்கர் மீதும், அவரது தாயார் மீதும் வன்முறையை ஏவி விட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.