BJP: கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதா? இந்துக்கள் போராட்டத்தை நசுக்குவதா? அரசை சாடும் எல்.முருகன்!
இது தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தி, அவமானப்படுத்துகின்ற செயல். காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதோடு, இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.

திருப்பரங்குன்றம் இந்து மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்கி விடலாம் என எண்ணி, காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
மலை பெயரை மாற்ற முயற்சி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயன்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. பழனியாண்டவர் கோவில் மலைப்பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வேல் எடுத்துச் செல்லப்படுகிறது.
வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் செயல்
சில நாட்களுக்கு முன்பு, அங்கு ஆடு பலி கொடுக்க சென்ற நபர்களால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் திரு. நவாஸ் கனி, பிரியாணி கொண்டு சென்று சாப்பிட்டு, மலையின் புனிதத்தைக் கெடுத்தார். இது தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தி, அவமானப்படுத்துகின்ற செயல். காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதோடு, இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.