’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாட்டுக்கு ஒரு சீட் கூட குறையாது!’ கோவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாட்டுக்கு ஒரு சீட் கூட குறையாது!’ கோவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாட்டுக்கு ஒரு சீட் கூட குறையாது!’ கோவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Kathiravan V HT Tamil
Published Feb 26, 2025 02:32 PM IST

"இந்தியா முழுவதும் விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும், எந்த மாநிலத்திற்கும் ஒரு இடம் கூட கிடைக்காது என்பதை நம்முடைய பிரதமர் உறுதி செய்து உள்ளார்"

’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாட்டுக்கு ஒரு சீட் கூட குறையாது!’ கோவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாட்டுக்கு ஒரு சீட் கூட குறையாது!’ கோவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

மகா சிவராத்திரியையொட்டி ஈஷா யோக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு கோயம்புத்தூர் வந்தடைந்தார். இன்று காலை கோவை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களையும் அவர்  திறந்து வைத்தார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு:- 

பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நிர்மலா சீதாராமன் அவர்கள் மிக அற்புதமான பட்ஜெட்டை தந்து இருக்கிறார். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பட்ஜெட் அமைந்து உள்ளது. 

மேலும் படிக்க:- ’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ தவெக தலைவர் விஜய் பேச்சு!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி

2024ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று உள்ளார். ஒரிசாவில் பாஜக ஆட்சி அமைந்து உள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி தேர்தல்களில் ஹார்டிக் வெற்றியை பாஜக பெற்று உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உடன் தொடங்கும். திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் வகுப்புவாதம், பிரிவினைவாதம் போன்ற சிந்தனைகள் முடிவுக்கு வரும். புரையோடி உள்ள ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும். தேச விரோத சிந்தனைகள் தமிழ்நாட்டில் வேறோடு பிடிங்கி எறியப்படும். 

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!

தமிழ் மக்களின் வாழ்வியல், தமிழ் மக்களின் மொழி வளம், தமிழ் மக்களின் கலாச்சாரத்தை போற்றும் தலைவராக மோடி உள்ளார். சுதந்திர இந்தியாவுக்கு பின் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை போற்றும் பிரதமராக மோடி உள்ளார்.  புனித செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இதை விட தனிச்சிறப்பை தமிழுக்கு யாராலும் செய்து இருக்க முடியாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது. பல்கலைக்கழகத்தில் கூட பெண்கள் பாதுகாப்போடு சென்றுவரக்கூடிய சூழல் இல்லை. 

வேங்கைவயல் சம்பவம் நடந்து 700 நாட்கள் நடைபெற்ற பிறகும் கூட குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. கள்ளச்சாராயம் புரையோடிக் கொண்டு இருக்கிறது. கள்ளச்சாராயத்திற்கு எதிராக புகார் கொடுக்கும் கல்லூரி மாணவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். தேச விரோத சிந்தனை மட்டுமே இங்கு ஆட்சிக் கட்டில் உள்ளது. 

1998ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமானவர்களை கூட இந்த அரசு காவல் பாதுகாப்புடன் அழைத்து செல்கிறது. கல்லூரி மாணவர்களை கெடுக்கும் போதை பொருள் மாபியா ஆட்சியாளர்கள் ஆசி உடன் செயல்படுகிறது. 

மேலும் படிக்க:- மும்மொழிக் கொள்கை: "What Bro…! It’s Very Wrong Bro….!" பாஜக, திமுகவை விளாசிய விஜய்!

ஊழல் செய்வதில் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் 

தமிழ்நாட்டில் இருந்து கனிமவளக் கொள்ளை, மணல் கொள்ளை ஆட்சியாளர்களின் முழு ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஊழல் செய்வதில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி முடித்தவர்களாக உள்ளனர். 

அதில் ஒரு தலைவர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்வதில் மிகப் பெரும் சாதனையை செய்து உள்ளார். மற்றொரு தலைவர் பண மோசடி மற்றும் செம்மண் கடத்தலிலும் சிக்கி உள்ளார். மற்றொரு தலைவர் வருமானத்திற்கு அதிகமான சொத்தை குவித்து வைத்து உள்ளார். மற்றொருவர் நிலக்கரியில் மிகப்பெரிய ஊழல் செய்து உள்ளார். மறக்கவே முடியாத 2ஜி ஊழல் இன்னும் முடியவில்லை. யாரெல்லாம் ஊழல் செய்வதில் உச்சத்தில் உள்ளவர்களை திமுக தேடி தேடி கட்சியில் சேர்த்து வருகிறது. 

ஆட்சியில் உள்ள அவலங்கள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முதல்வரும், அவரது புதல்வரும் ஏதாவது ஒரு புதிய பிரச்னைகளை தமிழ்நாட்டுக்கு உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். 

ஒரு தொகுதி கூட குறையாது

திரு.ஸ்டாலின் அவர்களே! தொகுதி மறுசீரமைப்பை புதிய பிரச்னையாக உருவாக்குகிறீர்கள். உங்களுக்காக நான் ஒன்றை சொல்கிறேன். நமது பிரதமர் மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார். ‘எந்த தென்னிந்திய மாநிலங்களிலும் உள்ள பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை ஒன்று கூட குறையாது. கூடுதலாகதான் கிடைக்கும்’ என்று. இந்தியா முழுவதும் விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும், எந்த மாநிலத்திற்கும் ஒரு இடம் கூட கிடைக்காது என்பதை நம்முடைய பிரதமர் உறுதி செய்து உள்ளார். 

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.