karunanidhi pen statue:கடலில் கருணாநிதி பேனா சிலைக்கு ஒன்றிய அரசு அனுமதி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Karunanidhi Pen Statue:கடலில் கருணாநிதி பேனா சிலைக்கு ஒன்றிய அரசு அனுமதி

karunanidhi pen statue:கடலில் கருணாநிதி பேனா சிலைக்கு ஒன்றிய அரசு அனுமதி

I Jayachandran HT Tamil
Sep 16, 2022 08:38 PM IST

கடலில் கருணாநிதியின் பேனா சிலைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

<p>கருணாநிதியின் பேனா சிலை</p>
<p>கருணாநிதியின் பேனா சிலை</p>

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிடத்தின் பின்புறம் நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதற்காக 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நினைவிடம் அமைக்கும் திட்டத்துக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் கோரப்பட்டது. மாவட்ட அளவிலான இந்த ஆணையம், இதற்கு சில நிபந்தனைகள் விதித்து, மாநில ஆணையத்துக்கு அனுப்பியது. மாநில ஆணையத்தில் ஜனவரியில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

நினைவிடம் அமையும் இடத்தில் இருந்து, 650 மீட்டர் தொலைவில் கடலில், 137 அடி உயரத்துக்கு கருணாநிதி நினைவாக, ரூ.81 கோடி செலவில் 'பேனா' நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில், பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை துவங்கியது. ரூ.81 கோடி மதிப்பில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித் துறை பெற்றுள்ளது. தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றல் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறும் முயற்சியில் பொதுப்பணித் துறை இறங்கியுள்ளது.

இதன்படி திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை கோரி ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு பொதுப்பணித் துறை கடிதம் எழுதியது.

இதனையடுத்து பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஒன்றிய அரசு முதற்கட்ட அனுமதியை அளித்துள்ளது. பொதுமக்கள் கருத்துக்கள் கேட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணியை துவங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பேனா நினைவுச்சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாகவும் பல்வேறு கட்ட அனுமதிகளை பெற வேண்டியுள்ளதாகவும் தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.