Anna's Achievements: முறியடிக்க முடியாத பேரறிஞர் அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!முதலமைச்சராக அப்படி என்ன செய்தார் அண்ணா ?
Anna's Achievements: முதலமைச்சராக அண்ணா இருந்தது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவானதுதான். ஆனாலும் தவிர்க்க முடியாத முப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவை என்ன என்று இங்கு பார்ப்போம்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டை இதற்கு முன் ஆண்ட ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சமமான பங்கு உண்டு. அந்த வரிசையில் முக்கியமான இடத்தில் இருப்பவர் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாத்துரை. முதலமைச்சராக அண்ணா இருந்தது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவானதுதான். ஆனாலும் தவிர்க்க முடியாத முப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவை என்ன என்று இங்கு பார்ப்போம்.
ஓராண்டுக்கு முன் ஆட்சிக்கு வந்தேன். தாய் திருநாட்டுக்கு '' என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களை செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது. 'இவர்களை விட்டு வைக்கலாமா?' ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 'முடியுமா ?' என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், ஆட்சியை கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டு வந்ததை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும்போது 'மக்கள் வெகுந்தெடுவார்களே !' என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா ? அந்த அச்சம் இருக்கிறவரையில், இங்கே யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள் ! ~ இவை முதலமைச்சராக இருந்தபோது பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகள்..
1. தாய்த் திருநாட்டிற்கு ' தமிழ்நாடு ' என்று பெயர்
தமிழ்நாடு என்ற பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப் போவது என்ன என்று கேட்கிறீர்கள். பதிலுக்கு நான் கேட்கிறேன், பார்லிமென்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரசிடெண்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள் ?