Udhayanidhi stalin: ’வரேன்னு சொன்னாரு!’ பிரதமரை சந்தித்த பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udhayanidhi Stalin: ’வரேன்னு சொன்னாரு!’ பிரதமரை சந்தித்த பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

Udhayanidhi stalin: ’வரேன்னு சொன்னாரு!’ பிரதமரை சந்தித்த பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

Kathiravan V HT Tamil
Jan 04, 2024 07:10 PM IST

”Udhayanidhi stalin: கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறேன் என்று பிரதமர் சொல்லி உள்ளார்”

பிரதமர் நரேந்திர மோடி உடன் உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடி உடன் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 19.01.2024 முதல் 31.01.2024 வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. 

இந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தார். 

பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேலோ இந்தியா நிகழ்வை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த விழாவுக்கு அழைப்பதற்காக அவரிடம் நேரம் கேட்டிருந்தேன்.  கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறேன் என்று பிரதமர் சொல்லி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்ட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு திருச்சி வந்த பிரதமரிடம் முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனை அவரிடம் நினைவுப்படுத்தினேன். கட்டாயம் செய்துத் தருவதாக கூறினார். 

பின்னர் சகோதாரர் ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் பேசியதை சொல்ல முடியாது. மணிப்பூரில் இருந்து தொடங்க உள்ள பாதயாத்திரை குறித்து பேசினார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.