பகீர் சம்பவம்.. காதலியின் அப்பான்னு நினைத்து முதியவரை கொலை செய்த இளைஞர்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பகீர் சம்பவம்.. காதலியின் அப்பான்னு நினைத்து முதியவரை கொலை செய்த இளைஞர்கள்!

பகீர் சம்பவம்.. காதலியின் அப்பான்னு நினைத்து முதியவரை கொலை செய்த இளைஞர்கள்!

Karthikeyan S HT Tamil
Oct 26, 2023 11:07 AM IST

Madurai Crime: காதலியின் தந்தை என நினைத்து பக்கத்து வீட்டுக்காரரை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

க்ரைம் (கோப்புபடம்)
க்ரைம் (கோப்புபடம்)

மதுரை கரிமேடு யோகனந்தசுவாமி தெற்கு மடம் பகுதியை சேர்ந்தவர் பொங்குடி மாயாண்டி. இவர் தனது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த இரண்டு பேர் அவரது மனைவி பாண்டியம்மாள் கண்முன் பொங்குடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக பாண்டியம்மாள் போலீசில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீஸார் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் மதுரை காளவாசல் பகுதியைச் பழனிச்சாமி மகன் முத்தமிழன் என்பவர் காதலியின் தந்தையை கொல்ல வந்தபோது, ஆள் மாற்றி பொங்குடியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தமிழன் (19), அவரது நண்பர் கோச்சடை சரவணப் பாண்டி மகன் அருணாச்சலம் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: "யோகனந்தசுவாமி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை முத்தமிழன் காதலித்துள்ளார். அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் சகோதரரும் முத்தமிழனை கடுமையாக எச்சரித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன் தனது நண்பரான அருணாச்சலத்தை அழைத்துக் கொண்டு அந்த பெண் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். முதலில் அருணாச்சலத்தை அனுப்பி, வீட்டில் யார் இருக்கிறார்கள் என பார்த்துவரும்படி கூறியுள்ளார்.

வீட்டில் அவரது தந்தை இருப்பதாக அருணாச்சலம் கூறியதால் இருவரும் திடீரென வீட்டுக்குள் புகுந்து தனது காதலியின் தந்தை என நினைத்து பொங்குடியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர். ஆனால், அவர்கள் தேடி வந்த நபர் அதே பகுதியிலுள்ள மாடி வீடு ஒன்றில் வசித்தது அவர்களுக்கு தெரியாமல் ஆளை மாற்றி கொலை செய்தது பிறகு தெரிந்தது. ஒருதலை காதல் விவகாரத்தில் நடந்த இச்சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.