Chain Robbery: அடங்க மாட்டாங்க போல…அதிரடி காட்டிய காவல்துறை!
சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தாலி செயின் பறித்துச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7.5 தாலி செயின் பறித்துச் சென்று இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
சென்னை மடிப்பாக்கம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் ரேவதி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இரவு வேலையை முடித்துவிட்டு மடிப்பாக்கத்தில் அமைந்திருக்கும் டாக்டர் ராமமூர்த்தி நகர் வழியாகத் தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரேவதி கழுத்திலிருந்த தாலி சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்து கீழே விழுந்த ரேவதி பின்னர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரும், மந்தைவெளி பகுதியில் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரும் ரேவதி அவர்களின் செயினை பறித்துச் சென்றது கண்டறியப்பட்டது.
பின்னர் அவர்களிடமிருந்த 7.5 சவரம் தாலி செய்து ரேவதியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். செயின் பறிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மெட்ரோ, வலிமை போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.