தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Two Flat Promoters Held For Cheating Dmdk Leader Sudhish To The Tune Of 43 Crore

LK Sudhish: மாதவரத்தில் 73 வீடுகள்.. ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றிய பில்டர்.. சுதீஷின் மனைவியிடம் 43 கோடி அபேஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 23, 2024 08:34 AM IST

இவருடைய மனைவி பூர்ணஜோதி. இவரிடம் லோக்கா பில்டர்ஸ் 43 கோடி ரூபாய் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியுடன்!
சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியுடன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது தவிர்த்து வணிக வளாக பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி பூர்ணஜோதி. இவரிடம் லோகோ பில்டர்ஸ்  43 கோடி ரூபாய் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருபவர் சந்தோஷ் சர்மா. இவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வந்தார். இவரிடம் மொத்தமாக  78 வீடுகளை வாங்குவதற்காக சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி, ரூ.43 கோடி கொடுத்து அதற்கான ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது

ஆனால், ஒப்பந்தத்தின் படி வீடுகள் தராமல், 48 வீடுகளை வேறு நபருக்கு சந்தோஷ் சர்மா விற்றதாக சொல்லப்படுகிறது. அத்துடன் பூர்ண ஜோதி அளித்த பணத்தையும் அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்த பூர்ண ஜோதி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ் சர்மா மற்றும் அவரின் உதவியாளர் சாகர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்