TVK Vijay in Parandur: ’ஏர்போர்ட் வேணானு சொல்ல! இங்க வேணானு சொல்ற!’ திமுக அரசை கிழித்த விஜய்!
TVK Vijay in Parandur: இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் உள்ளது. அதை நமது மக்கள் தெளிவாக புரிந்து வைத்து வைத்து உள்ளார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பொடவூர் கிராமத்திற்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய், விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் பரந்தூர், ஏரிவாய், நெல்வாய், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களுடன் உரையாடினார்.
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை!
மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வேனில் இருந்து தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த பிரச்னையில் உங்களோடு உறுதியாக நிற்பேன்; நம்மை ஆளும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் சொல்வது என்னவென்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. ஏர்போர்ட்டே வரக்கூடாதுனு நான் சொல்ல, இந்த இடத்தில் வரக்கூடாதுனு சொல்றன். இதை நான் சொல்லவில்லை என்றால் நான் வளர்ச்சிக்கு எதிரான்னு சொல்லுவாங்க.
சென்னை வெள்ளத்திற்கு காரணம் என்ன?
எல்லா உயிரினங்களின் இருப்பையும் புவி வெப்பமயமாதல் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. அதனுடைய ரிசல்ட்தான் மழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஆண்டுதோறும் சென்னையில் வெள்ளம் வரக் காரணமே சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் சதுப்பு நிலங்களை அழித்ததுதான் காரணம் என்று சொல்கிறது 90 சதவீத நீர்நிலை மற்றும் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கொண்டுவர நினைக்கும் முடிவை எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்.
அரிட்டாப்பட்டிக்கு ஒரு நிலைப்பாடு! பரந்தூருக்கு ஒரு நிலைப்பாடா?
அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால் அதே நிலைப்பாட்டைதானே பரந்தூர் பிரச்னையிலும் எடுத்திருக்க வேண்டும், எடுக்க வேண்டும். அரிட்டாப்பட்டி பகுதி மக்கள் எப்படி நமது மக்களோ, அதே போல் பரந்தூர் மக்களும் நமது மக்கள். அப்படித்தானே ஒரு அரசு யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் உள்ளது. அதை நமது மக்கள் தெளிவாக புரிந்து வைத்து வைத்து உள்ளார்கள்.
அப்போது ஆதரவு! இப்போது எதிர்ப்பா?
நமது ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள், நீங்க எதிர்க்கட்சியாக இருந்த போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். ஆனால் அதே நிலைப்பாட்டை தானே இங்கேயும் எடுக்க வேண்டும். அது எப்படி நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? என விஜய் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடையை செய்திகள்