TVK VS DMK: ’எங்களோட அரசியல் பண்ணாம? ட்ரம்ப் கூடவா அரசியல் பண்ண போறீங்க?’ போஸ் வெங்கட்டை விளாசிய தவெக பேச்சாளர்
போஸ் வெங்கட் அவர்கள், ‘உங்கள் கூடவா அரசியல் பண்ணனும் என நக்கல் அடித்து உள்ளார். எங்களோடு அரசியல் செய்யாமல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனா அரசியல் செய்யப்போகிறீர்கள்?, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் திமுகவை தமிழக வெற்றிக் கழகம்தான் வீழ்த்தும்

’எங்களோடு அரசியல் செய்யாமல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனா அரசியல் செய்யப்போகிறீர்கள்’ என திமுகவினருக்கு தமிழக வெற்றிக் கழக பேச்சாளர் லயோலா மணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக வெற்றிக் கழக பேச்சாளர் லயோலா மணி கூறுகையில், அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. எங்களை கூத்தாடி என்கிறீர்கள். கூத்தாடி என்பது பெருமையான வார்த்தைதான். ஆனால் அடிமையும், கொத்தடிமையும் அவமானகரமான வார்த்தை. சினிமாக்காரர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடியாது என போஸ் வெங்கட் பேசுகிறார். ஆனால் அவரே சினிமா துறையில்தான் உள்ளார்.
அதே போல் போஸ் வெங்கட் அவர்கள், ‘உங்கள் கூடவா அரசியல் பண்ணனும் என நக்கல் அடித்து உள்ளார். எங்களோடு அரசியல் செய்யாமல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனா அரசியல் செய்யப்போகிறீர்கள்?, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் திமுகவை தமிழக வெற்றிக் கழகம்தான் வீழ்த்தும்.