மும்மொழிக் கொள்கை: "What Bro…! It’s Very Wrong Bro….!" பாஜக, திமுகவை விளாசிய விஜய்!
நம்ம அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் என்ன செய்கிறார்கள் என்றால் செட்டிங் செய்துவிட்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ரெண்டு பேரும் அடித்துக் கொள்கிற மாதிரி அடித்துக் கொள்வார்களாம், அதை மக்கள் நம்ப வேண்டுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில், பிரபல நாட்டுப்புற பாடகர் கிடாக்குழி மாரியம்மாளின் இசை நிகழ்ச்சி உடன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உடன் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு உள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தவெக தலைவர் விஜய் பேச்சு:-
மக்கள் நலன், நாட்டு நலன், வளர்ச்சி பற்றி கவலை இல்லாமல் பணம் பற்றி சிந்திக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலைவிட்டே விரட்டுவதுதான் நமது முதல் வேலை. அதை ஜனநாயக முறைப்படி செய்ய 2026 தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம்.
கூடிய விரைவில் பூத் கமிட்டி மாநாடு
அந்த தேர்தலை சந்திக்க பூத் லெவல் ஏஜெண்ட்கள் முக்கியம். தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளுக்கு மட்டும்தான் பூத் ஏஜெண்ட்கள் வலுவாக இருக்கும் என்று சொல்வார்கள். தமிழ்நாட்டில் சுமார் 69 ஆயிரம் பூத் உள்ளது. அது எல்லாவற்றுக்கும் பூத் ஏஜெண்ட்களாக நமது கட்சி தோழர்களை நியமிப்போம். கூடிய விரைவில் பூத் கமிட்டி மாநாடு என நடத்துவோம். அன்று தெரியும் தவெக எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்தது எல்லை என்று. அன்றைக்கு தெரியும் தமிழக வெற்றி கழகம் முதன்மை சக்தியாக உள்ளது என்பது நிரூபணம் ஆகும்.
மும்மொழிக் கொள்கை விவகாரம் !
மும்மொழிக் கொள்கை என்று புதிய பிரச்னையை கிளப்பிவிடுகிறார்கள். அதாவது இதை செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்கமாட்டார்களாம். இது எல்.கே.ஜி., யு.கே.ஜி. பசங்க சண்டை போட்டுக் கொள்வது போல் உள்ளது. கொடுக்க வேண்டியவது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை.
What Bro…! Its Very Wrong Bro….!
ஆனால், இவங்க ரெண்டு பேரும், அதாங்க நம்ம பாசிசமும், நம்ம பாயாசமும், அதாவது நம்ம அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் என்ன செய்கிறார்கள் என்றால் செட்டிங் செய்துவிட்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ரெண்டு பேரும் அடித்துக் கொள்கிற மாதிரி அடித்துக் கொள்வார்களாம், அதை மக்கள் நம்ப வேண்டுமா?; What Bro…! Its Very Wrong Bro….!
இதுக்கு இடைல நம்ம பசங்க ஒரு சம்பவம் செய்துவிட்டு வெளியே வந்து விடுகிறார்கள். TVKforTN என ஹேஷ்டேக்கை போடுகிறார்கள். யார் சார் நீங்களெல்லாம். எங்கே இருக்கீங்க?
சுயமரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டோம்
இதெல்லாம் மக்களுக்கு நாம சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கே தெரியும் இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று. நம்ம ஊரு சுமரியாதை ஊரு! நாம எல்லோரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். நாம எல்லா மொழிகளையும் மதிப்போம். அதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது. தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் படிக்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை.
மொழியை திணித்தால் எப்படி?
ஆனால் கூட்டாட்சி உரிமையை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாக திணித்தால் எப்டி ப்ரோ? நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொய் பிரச்சாரங்களை புறம்தள்ளிவிட்டு உறுதியாக எதிர்ப்போம். நம்பிக்கை உடன் இருங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.
