தவெக தலைவர் விஜய் அதிரடி.. வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!
திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகமும் வழக்கு தொடர்ந்துள்ளது.

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகமும் வழக்கு தொடர்ந்துள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றபட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக விஜய் வெளியிட்டிருந்த அறிக்கை:
முன்னதாக மத்திய அரசின் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், "ஜனநாயகத்துக்கு எதிரான வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் இந்த மசோதா என்பது மதசார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.