இது நல்லதல்ல! ஆளுநரையும், ஆளும் திமுக அரசையும் போட்டு விளாசிய விஜய்! பரபரப்பு ட்வீட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இது நல்லதல்ல! ஆளுநரையும், ஆளும் திமுக அரசையும் போட்டு விளாசிய விஜய்! பரபரப்பு ட்வீட்!

இது நல்லதல்ல! ஆளுநரையும், ஆளும் திமுக அரசையும் போட்டு விளாசிய விஜய்! பரபரப்பு ட்வீட்!

Kathiravan V HT Tamil
Jan 06, 2025 02:58 PM IST

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

இது நல்லதல்ல! ஆளுநரையும், ஆளும் அரசையும் போட்டு விளாசிய விஜய்! பரபரப்பு ட்வீட்!
இது நல்லதல்ல! ஆளுநரையும், ஆளும் அரசையும் போட்டு விளாசிய விஜய்! பரபரப்பு ட்வீட்!

உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்

தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை உடன் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகாக தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், தவாக தலைவர் வேல்முருகனும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரை நியமனம் செய்யாததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். ஆனால் நிகழ்ச்சியின் நிறைவு பகுதியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கும் மரபு உள்ளதால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் வாசிக்கப்படவில்லை.

இதனை காரணம் காட்டி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து கோஷம் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

சட்டப்பேரவை சம்பவம் குறித்து விஜய் ட்வீட்

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ளார் அதில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

நேரலை துண்டிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இடையூறு இல்லாமல் ஒளிபரப்பு செய்க

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.