TVK Vijay in Parandur: தவெக கொடி ஏந்தி பரந்தூர் வந்த விஜய்! சாரை சாரையாக குவிந்த மக்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tvk Vijay In Parandur: தவெக கொடி ஏந்தி பரந்தூர் வந்த விஜய்! சாரை சாரையாக குவிந்த மக்கள்!

TVK Vijay in Parandur: தவெக கொடி ஏந்தி பரந்தூர் வந்த விஜய்! சாரை சாரையாக குவிந்த மக்கள்!

Kathiravan V HT Tamil
Jan 20, 2025 12:38 PM IST

விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை சந்தித்து பேச தவெக தலைவர் விஜய்க்கு ஒரு மணி நேரம் வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

TVK Vijay in Parandur: தவெக கொடி ஏந்தி பரந்தூர் வந்த விஜய்! சாரை சாரையாக குவிந்த மக்கள்!
TVK Vijay in Parandur: தவெக கொடி ஏந்தி பரந்தூர் வந்த விஜய்! சாரை சாரையாக குவிந்த மக்கள்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு எதிராக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 35 பேர் சந்தித்து உள்ளனர். இந்த நிலையில் பொடவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து உரையாடுகிறார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.