TVK Vijay in Parandur: உங்கள் காலடி மண்ணை தொட்டு கும்புடுறேன்! உங்களோடதான் நிற்பேன்! பரந்தூரில் விஜய் அதிரடி!
கட்சி மாநாட்டில் இயற்கை வள பாதுகாப்பு குறித்து பேசினேன். இயற்கைக்கு ஊறு விளைவிக்காத சூழலியல் மற்றும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள கூடிய பகுதிசார் மாநில வளர்ச்சி பரவலாக்கம் என்பதுதான் எங்கள் கொள்கை. இதை நான் சொல்ல காரணம் ஓட்டு அரசியலுக்காக இல்லை.

காஞ்சிபுரம் மாவட்டம் பொடவூர் கிராமத்திற்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய், விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் பரந்தூர், ஏரிவாய், நெல்வாய், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களுடன் உரையாடினார்.
நாட்டுக்கு விவசாயிகள் முக்கியம்!
மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வேனில் இருந்து தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த போராட்டத்திற்காக ராகுல் என்ற சின்ன பையன் பேசியதை பார்த்து பரந்தூர் வந்து உள்ளேன். அந்த குழந்தையின் பேச்சு எனது மனதை ஏதோ செய்துவிட்டது. உங்கள் எல்லோர் உடனும் தொடர்ந்து நிற்பேன். வீட்டுக்கு எப்படி பெரியவர்கள் முக்கியமோ, அதே போல் நமது நாட்டுக்கு விவசாயிகள் முக்கியம்.
உங்கள் ஆசீர்வாதத்துடன் எனது அரசியல் பயணம்!
உங்களை போன்ற விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டுதான் எனது பயணத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன். என்னை உங்கள் வீட்டில் உள்ள ஒரு மகனாக எனது கள அரசியல் பயணத்திற்கு சரியான இடம் இதுதான் என தோன்றியது. எனது கள அரசியல் பயணம் உங்கள் ஆசீர்வாதத்துடன் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
ஓட்டு அரசியலுக்காக இல்லை!
கட்சி மாநாட்டில் இயற்கை வள பாதுகாப்பு குறித்து பேசினேன். இயற்கைக்கு ஊறு விளைவிக்காத சூழலியல் மற்றும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள கூடிய பகுதிசார் மாநில வளர்ச்சி பரவலாக்கம் என்பதுதான் எங்கள் கொள்கை. இதை நான் சொல்ல காரணம் ஓட்டு அரசியலுக்காக இல்லை.
போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சட்ட போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம். இதை உங்கள் முன் ரொம்ப வலுவாக வலியுறுத்துகிறேன்.

தொடர்புடையை செய்திகள்