Tamilnadu Assembly 2025: 'தயவு செய்து அண்ணா'.. நேரடியாக கேட்ட வேல்முருகன்.. பங்கமாக கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்!
Tamilnadu Assembly 2025: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தனது தொகுதி தொடர்பாக கோரிக்கை வைத்து பேசியோது, அமைச்சர் துரைமுருகன் பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டப்பேரவையின் 4 ஆம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி பதில் நேரத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இன்றைய கூட்டத்தின் போது, சிறப்பு நிகழ்வாக கருதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டி கிராமம் அருகே மணிமுக்தா ஆற்றில் நிதிநிலையை பொறுத்து தடுப்பணை கட்டப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டமன்றத்தில் உறுப்பினர் உதயசூரியன் எழுப்பிய கேள்விக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
கோரிக்கை வைத்த வேல்முருகன்
இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், " தற்போது ஏற்பட்ட மழை, வெள்ளம் புயலின் காரணமாக, எனது தொகுதியில் உள்ள உளுந்தம்பேட்டை, நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகள் முழுவதுமாக மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியது. மத்திய அரசின் குழுக்களும், நீர்வளத்துறை அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பணை கட்டி பாதுகாப்பு சுவர் அமைத்து தரும்படி அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அண்ணன் உங்கள் காலத்தில் செய்து தாருங்கள்." என்று கோரிக்கை வைத்தார்.
கலாய்த அமைச்சர் துரைமுருகன்
அப்போது பேசிய, அமைச்சர் துரைமுருகன், " உறுப்பினர் வேல்முருகன் சொன்ன அந்த திட்டத்தை அதிகாரிகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். அதை, இந்தாண்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், இதை ஒரே வரியில் கேட்டிருக்காலம்.. இவ்வளவு நேரம் கேட்டங்களே அதான் நான் சமாளிக்க கஷ்டமாக போச்சு." என்றார்.
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளியேறியது பரபரப்பை கிளப்பி இருந்தது. இருப்பினும், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இதனைத் தொடர்ந்து தொடங்கிய பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இரங்கல் குறிப்புடன் ஒத்திவைக்கப்பட்டது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
கருப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
மூன்றாம் நாளான நேற்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அ.தி.மு.க, வி.சி.க. ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதை தொடர்ந்து சட்டப்பேரவையின் 4 ஆம் நாள் கூட்ட தொடர் தொடங்கிய நிலையில், யார் அந்த சார் என்ற பேட்ஜுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர்.
தொடர்புடையை செய்திகள்