TVK: ’இரு மொழி கொள்கையில் படித்த நீங்கள் இரு மாநில கவர்னர் ஆகவில்லையா?’ தமிழிசைக்கு தவெக சரமாரி கேள்வி!
மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி, பொதுப் பட்டியலில் (concurrent list) இருப்பதால் ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒத்திசைவில் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு எந்த ஒத்திசைவும் வழங்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் எனச் சொல்வது எப்படி நியாயம்?

திருமதி தமிழிசை அவர்களே.. நீங்கள் எங்கு படித்தீர்கள்? இருமொழிக் கொள்கையில் படித்த நீங்கள் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநராகவில்லையா? என தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இருமொழிக்கொள்கையே தவெக கொள்கை
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பாஜகவை விமர்சனம் செய்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் ட்வீட் செய்து உள்ளார். அதில், நீங்கள் வேண்டுமானால் ஒரு மனிதனை இந்துவாய், இஸ்லாமியனாய், கிருத்தவனாய்ப் பார்க்கலாம். அவர்கள் மூவரையும் மனிதனாக மட்டுமே பார்க்கும் உயர்ந்த இடம் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள். பயிற்று மொழியாக தமிழ் மொழி. இணைப்பு மொழியாக ஆங்கிலம். இந்த இருமொழிக் கொள்கையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை.