தவெக விஜய் பேச்சு: ‘நீங்க இனி ரசிகர்கள் இல்லை, வர்ச்சுவல் வாரியர்ஸ்!’ தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தவெக விஜய் பேச்சு: ‘நீங்க இனி ரசிகர்கள் இல்லை, வர்ச்சுவல் வாரியர்ஸ்!’ தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!

தவெக விஜய் பேச்சு: ‘நீங்க இனி ரசிகர்கள் இல்லை, வர்ச்சுவல் வாரியர்ஸ்!’ தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!

Kathiravan V HT Tamil
Published Apr 19, 2025 03:33 PM IST

"இனி நீங்கள் ரசிகர்கள் இல்லை, நமது கட்சியின் வர்ச்சுவல் வாரியர்ஸ்!" என்று உற்சாகமாக அழைத்த விஜய், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றையும் வழங்கினார். "

தவெக விஜய் பேச்சு: ‘நீங்க இனி ரசிகர்கள் இல்லை, வர்ச்சுவல் வாரியர்ஸ்!’ தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!
தவெக விஜய் பேச்சு: ‘நீங்க இனி ரசிகர்கள் இல்லை, வர்ச்சுவல் வாரியர்ஸ்!’ தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தொகுதி வாரியாக இரண்டு பேர் வீதம் சுமார் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, சமூக வலைதளங்களில் கட்சியின் கொள்கைகளையும் மக்களின் தேவைகளையும் எவ்வாறு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், ஆதார் அட்டை மற்றும் மாவட்டச் செயலாளரின் அனுமதிக் கடிதம் ஆகியவற்றைக் கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே நுழைவு அனுமதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் காணொளி மூலம் உரையாற்றினார். இந்தியாவிலேயே மிகப்பெரிய சமூக ஊடகப் படையாக தமிழக வெற்றி கழகத்தின் ஐ.டி. பிரிவு விளங்குவதாகவும், இதனை மற்றவர்களே அங்கீகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

"இனி நீங்கள் ரசிகர்கள் இல்லை, நமது கட்சியின் வர்ச்சுவல் வாரியர்ஸ்!" என்று உற்சாகமாக அழைத்த விஜய், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றையும் வழங்கினார். "நமது ஐ.டி. பிரிவு கண்ணியமாகவும், புனிதமாகவும் செயல்பட வேண்டும். இதனை எப்போதும் மனதில் வைத்து செயலாற்றுங்கள்," என்று அவர் வலியுறுத்தினார்.

நெட்வொர்க் பிரச்சினை காரணமாக நேரடி ஜூம் அழைப்பில் பங்கேற்க முடியாத சூழலில், இந்த பதிவு செய்யப்பட்ட செய்தி மூலம் தனது எண்ணங்களைப் பகிர்ந்த விஜய், விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க உள்ளதாக உறுதியளித்தார். "அனைவருக்கும் எனது வாழ்த்துகள், வெற்றி நிச்சயம்!" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.