Bussy Anand Arrested: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! விஜய் ஆளுநர் சந்திப்பு காரணமா? இதோ விவரம்!
Pussy Anand Arrested: முன் அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்காக புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்
![Pussy Anand Arrested: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! விஜய் ஆளுநர் சந்திப்பு காரணமா? இதோ விவரம்! Pussy Anand Arrested: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! விஜய் ஆளுநர் சந்திப்பு காரணமா? இதோ விவரம்!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/30/550x309/Vijay_situation_1728193808069_1735557127394.png)
சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
விஜய் வெயிட்ட கடிதம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அரசியல் பின்புலம் உள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டு உள்ளார். அதில், அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலகங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு தங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.
எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாச் நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என எழுதி இருந்தார்.விஜய் எழுதிய இந்த கடிதத்தை தமிழகம் முழுவதும் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறனர்.
ஆளுநரை சந்தித்த விஜய்!
இந்த நிலையில் இன்று பிற்பகலில் கிண்டி, ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்தார். அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்ததாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
புஸ்ஸி ஆன்ந்த் கைது
இன்றைய தினம் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கடிதத்தை துண்டு பிரசுராமாக அக்கட்சியினர் வழங்கி வந்ததை பார்வையிட புஸ்ஸி ஆனந்த் வந்துள்ளார். அப்போது, முன் அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்காக புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)