TVK Vijay in Parandur: ’நாடகம் ஆடுவதில்தான் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே!’ பரந்தூரில் அரசை வச்சு செய்த விஜய்!
கொஞ்ச நாளைக்கு முன் நமது புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததற்கு தடைவிதித்தார்கள். ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்தற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன்.

காஞ்சிபுரம் மாவட்டம் பொடவூர் கிராமத்திற்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய், விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் பரந்தூர், ஏரிவாய், நெல்வாய், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களுடன் உரையாடினார்.
நாடகம் ஆடுவதில்தான் கிள்ளாடிகள் ஆச்சே!
மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வேனில் இருந்து தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக அரசின் நாடகத்தை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நீங்கள் உங்கள் வசதிக்காக மக்களோடு நிற்பதும், மக்களோடு நிற்காமல் இருப்பதையும், நாடகம் ஆடுவதையும், நாடகம் ஆடாமல் இருப்பதையும் பார்த்துவிட்டு, அதுசரி நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில்தான் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே!, அதையும் மீறி விவசாயிகள் போராடினால் பிரச்னைதான்.
விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்க!
விமான நிலையத்திற்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் குறைவாக உள்ள இடங்களாக பார்த்து விமான நிலையங்களை கொண்டு வாருங்கள். வளர்ச்சிதான் மக்களை முன்னேற்றும், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் வரும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்.
ஊருக்கு வர ஏன் தடை என தெரியவில்லை!
உங்கள் ஊர் கிராம தேவதைகளான கொல்லம்வட்டாள் அம்மன் மேலையும், எல்லையம்மன் மேலையும் ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். அந்த நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உங்கள் வீட்டு பிள்ளையான நானும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக இருப்பேன். ஏகனாபுரம் திடலில்தான் எல்லோரையும் சந்திக்க நினைத்தேன். நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று தெரியவில்லை.
மீண்டும் ஊருக்குள் வருவேன்!
கொஞ்ச நாளைக்கு முன் நமது புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததற்கு தடைவிதித்தார்கள். ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்தற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன் என விஜய் பேசினார்.

தொடர்புடையை செய்திகள்