Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி
இது தொடர்ந்து அரிட்டாபட்டி மக்களுக்கு இன்று ஒரு நல்ல தகவல் வரும் என அண்ணாமலை முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையில் தற்போது டங்ஸ்டன் திட்டம் அமலாக்காது என போராட்டக் குழுவினரிடம் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது என டங்ஸ்டன் போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடிட்டாபட்டி போராட்டக் குழுவினர் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினார். சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்ட குழுவினர் வலியுறுத்தினார். இது தொடர்ந்து அரிட்டாபட்டி மக்களுக்கு இன்று ஒரு நல்ல தகவல் வரும் என அண்ணாமலை முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையில் தற்போது டங்ஸ்டன் திட்டம் அமலாக்காது என போராட்டக் குழுவினரிடம் மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.
மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் !
தமிழகத்தின் முதல் பல்லுயிர் மரபுச் சின்னமான அரிட்டாபட்டிக்கு அருகில் உள்ள 10 கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை மத்திய சுரங்க அமைச்சகம் நவம்பர் 7ஆம் தேதி வழங்கியதை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவில் உள்ள பல கிராமங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.