Madurai Rally: மதுரையை கதறவிட்ட டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி! திக்கி திகைக்கும் போலீஸ்! தன் எழுச்சியாக கூடிய மக்கள்!
ஆயிரக்கணக்கான காவல்துறையின் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், டங்ஸ்டன் சுரங்க அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரியும், நரசிங்கம்பட்டி முதல் மதுரை வரை ஆயிரக்கணக்கான மக்கள் நடைபயணமாக செல்லும் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் !
தமிழகத்தின் முதல் பல்லுயிர் மரபுச் சின்னமான அரிட்டாபட்டிக்கு அருகில் உள்ள 10 கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை மத்திய சுரங்க அமைச்சகம் நவம்பர் 7ஆம் தேதி வழங்கியதை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவில் உள்ள பல கிராமங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய சுரங்க அமைச்சகத்திற்கு தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் நவம்பர் 29 அன்று கடிதம் எழுதியிருந்தார். சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மத்தியத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மோடியை வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியில் டங்ஸ்டன் மற்றும் ஆந்திராவின் பலேபாளையம் டங்ஸ்டன் மற்றும் அதனுடன் தொடர்புடைய கனிம தொகுதி ஆகியவற்றில் சுரங்கம் தோண்டுவதற்கான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் நவம்பர் 7 அன்று பெற்றதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேரணியாக செல்லும் கிராம மக்கள்!
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து மக்கள் தன்னெழுர்ச்சியாக போராடி வருகின்றனர். மேலூரில் தொடங்கிய மக்கள் பேரணி மதுரை மாநகரை அடைந்து உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான காவல்துறையின் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
நடைபயணாமாக சென்ற மக்களை தடுத்து வாகன பேரணியாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில், தடையை மீறி நடைபயணமாக மதுரை தமுக்கம் மைதானத்திற்கு மக்கள் வந்து உள்ளனர். மேலும் வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் வைத்து தொடர் முழக்கங்களை மக்கள் எழுப்பி வருகின்றனர்.