’2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் அதிமுக! கழற்றி விடப்படும் ஈபிஎஸ்?’ போட்டு உடைத்த டிடிவி தினகரன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் அதிமுக! கழற்றி விடப்படும் ஈபிஎஸ்?’ போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

’2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் அதிமுக! கழற்றி விடப்படும் ஈபிஎஸ்?’ போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

Kathiravan V HT Tamil
Dec 17, 2024 01:03 PM IST

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குகள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

டிடிவி தினகரன்’2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் அதிமுக! கழற்றி விடப்படும் ஈபிஎஸ்?’ போட்டு உடைத்த டிடிவி தினகரன்!
டிடிவி தினகரன்’2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் அதிமுக! கழற்றி விடப்படும் ஈபிஎஸ்?’ போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக என்ற கட்சி அழிந்து விடும் என பாஜக நினைக்கவில்லை. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இருந்தால்தான் திமுக எனும் தீய சக்தியை வெல்ல முடியும் என்று நினைக்கின்றனர். 2021ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் எடுத்த தவறான முடிவால் திமுக ஆட்சிக்கு வந்தது. 2024 தேர்தலில் பாஜக உடன் நான் நேரடியாக கூட்டணி வைத்து உள்ளேன். அன்றைக்கு திமுகவுக்கு எதிராக வேட்பாளரை ஈபிஎஸ் நிறுத்தாமல் இருந்தாலே நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். புரட்சித் தலைவர் கண்டெடுத்த இரட்டை இலை சின்னம், திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்கின்றது. எனக்கு தெரிந்த வரை பாஜகவில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அதிமுக பலமாக இருந்து கூட்டணியில் வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

234 தொகுதிகளுக்கும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் செய்ய உள்ளாரே?

மாவட்ட வாரியாக கூட்டங்களில் பிரச்னை நடந்து உள்ளது. ஈபிஎஸ் ஆட்சியில் இருந்ததால் அமைதியாக இருந்தார்களே தவிர, தொண்டர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளார்கள். இது அவர் சுற்றுப்பயணம் செல்லும் போது போலீஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டி வரும். பழனிசாமி பொதுச்செயலாளராக பணபலத்துடன் உள்ளதால் வணிக நிறுவனம் போல் அதிமுக உள்ளது. 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு ஈபிஎஸ் மூடுவிழா நடத்திவிடுவார். 

தவெக- அதிமுக கூட்டணி அமையுமா?

அதிமுகவில் உள்ள தொண்டர்களை தன் வசப்படுத்த சொல்லும் அரசியல் கருத்துதானே தவிர மெகா கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை. திமுக ஏற்கெனவே 200 தொகுதிகளில் ஜெயித்து உள்ளனர். அவர்கள் 200 தொகுதிகள் ஜெயிப்போம் என்று சொல்வது ஆணவமா என்பது தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் பண பலத்தால் திமுக வென்று உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது வழக்குகள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. 

பாஜக கூட்டணியில் அதிமுக இணையுமா?

அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். பாஜக கூட்டணியில் அதிமுக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. அதில் பழனிசாமி இருப்பாரா, இருக்க மாட்டாரா என்று நான் சொல்ல விரும்பவில்லை. அதிமுக  முன்னாள் மற்றும் இன்னாள் நிர்வாகள் பாஜக கூட்டணியை விரும்புகிறார்கள். அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமானால் தேசிய ஜனநாயக கூட்டணி உடன் வந்தால்தான் முடியும். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.