Annamalai: ’ஐ.டி ரெய்டு! டெல்லி நிதியை அமுக்கினாரா அண்ணாமலை?’ திருச்சி சூர்யா எழுப்பும் 6 கேள்விகள்!
ஊரில் உள்ள எல்லாரையும் ரைடு அனுப்புவேன் என மிரட்டும் உங்கள் வீட்டிற்கே ரைடு அனுப்பியது யார்? கட்சி வளர்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக டெல்லி அனுப்பிய நிதியை மச்சான் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டீர்கள் என்ற கோபத்தில் அமித்ஷா தான் ரெய்டு அனுப்பினாரா?

கட்சி வளர்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக டெல்லி அனுப்பிய நிதியை மச்சான் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டீர்கள் என்ற கோபத்தில் அமித்ஷா தான் ரெய்டு அனுப்பினாரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழக்கறிஞரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான திருச்சி சூர்யா சிவா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தள பதிவில், அண்ணாமலைக்கு ஆறு கேள்விகள் என கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அதில், அண்ணன் அண்ணாமலை அவர்களே வணக்கங்க. தான் மட்டுமே யோக்கியமான அரசியல்வாதி என்ற நினைப்பில் எல்லாரையும் கேள்வி கேட்கும் நீங்கள் நான் கேட்கும் ஆறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா ?
* மத்திய அரசின் வருமானவரித்துறை கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்திய திண்டுக்கல் சத்திரபட்டி செந்தில்குமாருக்கும் உங்களுக்கும் என்ன உறவு? உங்களுடைய அத்தை மகனின் மச்சானா அவர்?