தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Trending News Tamilnadu August 16

ஆவினில் பலாப்பழ ஐஸ்கிரீம், மீண்டும் சர்வதேச போட்டி உள்பட முக்கிய செய்திகள் ஆக 16

Divya Sekar HT Tamil
Aug 16, 2022 05:01 PM IST

ஆவினில் பலாப்பழ ஐஸ்கிரீம், மீண்டும் சர்வதேச போட்டிக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகள் சுருக்கமாக காண்போம்.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்

ட்ரெண்டிங் செய்திகள்

சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த அண்ணா நகரை சேர்ந்தவருக்கு 2 வாரங்களில் சான்று தர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

தென்காசி மாவட்டம் செங்ககோட்டை அருகே தாய் கண்டித்தால் பிளஸ் 2 மாணவி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆலந்துறை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வளர்ப்பு தந்தையின் நண்பரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சுதந்திர தினத்தையொட்டி பொது விடுப்பு அளிக்காத 158 வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எனது பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள் என்று தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 39,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து உதவி பேராசிரியர்களுக்கும் உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசு, கொற்றலை ஆற்றைப்பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின்கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 5ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சைக்கிளில் வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவி லட்சுமிஶ்ரீ மீது மாநகரப் பேருந்து ஏறி பலியான சம்பவம் தாங்கமுடியாத துயரத்தை அளிக்கிறது என மநீம தெரிவித்துள்ளது,

ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் 80 சதவீத அ.தி.மு.க.வினர் இல்லை, 80 பேர் மட்டுமே உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஆவினில் புதிய பொருட்களை வரும் 20ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கிறார்.

நாகர்கோவில் இருந்து கோதையாறு சென்ற அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில், நடத்துனர் மற்றும் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக சிறுகாயத்தோடு உயிர் தப்பினர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்