ED ரெய்டு எதிரொலி! டாஸ்மாக் அதிகாரி வீட்டு வெளியே கிழித்து போடப்பட்ட பேப்பர் துண்டுகள்! எடுத்துச் சென்ற அதிகாரிகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ed ரெய்டு எதிரொலி! டாஸ்மாக் அதிகாரி வீட்டு வெளியே கிழித்து போடப்பட்ட பேப்பர் துண்டுகள்! எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

ED ரெய்டு எதிரொலி! டாஸ்மாக் அதிகாரி வீட்டு வெளியே கிழித்து போடப்பட்ட பேப்பர் துண்டுகள்! எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

Kathiravan V HT Tamil
Published May 16, 2025 01:02 PM IST

”டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், சென்னையில் எட்டு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன”

ED ரெய்டு எதிரொலி! டாஸ்மாக் அதிகாரி வீட்டு வெளியே கிழித்து போடப்பட்ட பேப்பர் துண்டுகள்! எடுத்துச் சென்ற அதிகாரிகள்!
ED ரெய்டு எதிரொலி! டாஸ்மாக் அதிகாரி வீட்டு வெளியே கிழித்து போடப்பட்ட பேப்பர் துண்டுகள்! எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக கடந்த மார்ச் மாதம் முதல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், சென்னையில் எட்டு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் பின்னணி

முன்னதாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை இரண்டு முறை சோதனை நடத்தியிருந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு முன்வைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, விசாகன் இல்லத்தில் எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விசாகனும் வீட்டிற்குள் இருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ்ஆப் பதிவுகள் கிழிக்கப்பட்ட சம்பவம்

சோதனையின் போது, விசாகன் இல்லத்தின் அருகே வாட்ஸ்ஆப் உரையாடல் பதிவுகள் (WhatsApp Chat History) 20-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கிழிக்கப்பட்ட நிலையில் கிடைத்தன. இந்த பதிவுகள் கடந்த ஒரு வருடத்தில் பரிமாறப்பட்டவை எனவும், முக்கிய தகவல்களை உள்ளடக்கியவை எனவும் தெரியவந்துள்ளது. இதனால், சோதனை நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இதைப் பற்றி அறிந்தவுடன், நான்கு அதிகாரிகள் வெளியே வந்து கிழிக்கப்பட்ட பதிவுகளை சேகரித்து மீண்டும் வீட்டிற்குள் சென்றனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்தபோது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

சோதனையின் நோக்கம்

விசாகன் இல்லத்தில் ஆவணங்கள், கணினிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களில் முக்கிய தகவல்கள் உள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை மதியத்திற்கு பிறகு முடிவடையலாம் எனவும், அதன் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது விசாரணை விவரங்கள் குறித்து தெளிவாக தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.