TOP 10 TAMIL NEWS: ’தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் முதல் அம்பேத்கர் பிறந்தநாள் வரை!’
TOP 10 TAMIL NEWS: தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம், அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜய் மரியாதை, துணை வேந்தர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் பொதுமக்கள் வழிபாடு நடத்தினார். காஞ்சி காமாட்சி அம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.
2.அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
3.அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
4.தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5.மீன்பிடித்தடைக்காலம் அமல்
விசைப்படகு மீனவர்களுக்கு இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். நாட்டுப்படகு மற்றும் சிறிய ரக படகுகளை வைத்திற்கும் மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவார்கள்.
6.கமல் புத்தாண்டு வாழ்த்து
உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப்புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாக இணைப்பது தமிழுணர்வு என மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து.
7.அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக பரப்புரை
அதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து பரப்புரை செய்ய உள்ளதாக முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி அறிவிப்பு.
8.முதல்வர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்.16ம் தேதி துணைவேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
9.காட்டு முயல் வேட்டை-3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாரம்பாடி வனப்பகுதியில் காட்டு முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 3 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு. ஏர்கன் துப்பாக்கியும் பறிமுதல்.
10.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 424 கன அடியாக அதிகரிப்பு. அணையின் நீர் மட்டம் 107.53 அடியாகவும், நீர் இருப்பு 74.945 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றம்.
