தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!

தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!

Kathiravan V HT Tamil
Published Jun 13, 2025 07:52 AM IST

சென்னை மெட்ரோ ரயில் பணிகளின் போது விபத்து, ராஜ்யசபா எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு, கூட்டணி குறித்து அண்ணாமலை பேட்டி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!
தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!

1. திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு

திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தங்கள் சான்றிதழ்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

2. கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அவர் தேர்தல் அதிகாரியிடம் சான்றிதழ் பெற்றார்.

3. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு

அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் சான்றிதழ்களை வைத்து ஆசி பெற்றனர்.

4. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கேள்வி எழுப்பினார். அது என்ன விண்வெளி ஆய்வு நிலையமா என்றும் கேள்வி.

5.கூட்டணி குறித்து அண்ணாமலை கருத்து

கூட்டணி ஆட்சி விவகாரம் பற்றி பேசினால் பஞ்சாயத்து ஆகிவிடும் என பாஜகவின் அண்ணாமலை தெரிவித்தார். கட்சித் தலைவர்களின் முடிவுக்கு தொண்டனாக கட்டுப்படுவதாகவும் அவர் விளக்கம்.

6. பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு

2026 தேர்தல் வரை பாமக தலைவர் பதவியில் இருப்பேன் என ராமதாஸ் பேட்டி. தேர்தலுக்கு பிறகு அன்புமணி வாரிசாக வருவார் எனவும், அதுவரை கூட்டணி முடிவுகளை தானே எடுப்பேன் எனவும் திட்டவட்டம்.

7. தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை

கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு ஆரஞ்ச அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

8. நீலகிரிக்கு ரெட் அலர்ட்

நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக கனமழைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.

9. சென்னையில் மிதமான மழை வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் சில இடங்களில் ஜூன் 18 வரை மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

10.சென்னை மெட்ரோ கட்டுமானத்தில் விபத்து 

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது இணைப்பு பாலம் சரிந்து விழுந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் என்பவர் உயிரிழப்பு