டாப் 10 தமிழ் நியூஸ்: செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு முதல் பெண்கள் சொத்து சலுகை அரசாணை வரை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டாப் 10 தமிழ் நியூஸ்: செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு முதல் பெண்கள் சொத்து சலுகை அரசாணை வரை

டாப் 10 தமிழ் நியூஸ்: செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு முதல் பெண்கள் சொத்து சலுகை அரசாணை வரை

Kathiravan V HT Tamil
Updated Mar 30, 2025 10:09 AM IST

பெண்கள் சொத்தில் பத்திரப்பதிவு சலுகை அளிக்கும் அரசாணை வெளியீடு, செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு, ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு கேள்வி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

டாப் 10 தமிழ் நியூஸ்: செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு முதல் பெண்கள் சொத்து சலுகை அரசாணை வரை
டாப் 10 தமிழ் நியூஸ்: செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு முதல் பெண்கள் சொத்து சலுகை அரசாணை வரை

1.பெண்கள் சொத்து சலுகை அரசாணை

பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்கள் பதிவுசெய்யப்பட்டால் 1% பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறீவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் இதன்படி ரூ.10 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட உள்ளது.

2.செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

3.நிர்மலா சீதாராமனை சந்தித்தது தவறா?

தமிழ் பெண்ணான நிர்மலா சீதாராமனை தமிழரான கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்ததில் தவறு இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

4.ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு கேள்வி

இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே…! நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியை பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க தயாரா? என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி.

5.சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரண்

சிறுபான்மை மக்களுக்கு திமுக எப்போதும் அரணாக உள்ளது என ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

6.தீபாவளி சீட்டு நடத்தி மோசடி

கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சூர்யமகாலட்சுமி - சிவக்குமார் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

7.கரடியை பிடித்த வனத்துறை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்த கரடியை வனத்துறையினர் கூண்டில் பிடித்தனர்.

8.மாஞ்சாநூல் விற்ற நபர் கைது

தடை செய்யப்பட்ட காத்தாடி, மாஞ்சா நூல் ஆகியவற்றை உ.பி.யில் இருந்து ஆன்லைன் மூலம் வாங்கி, சென்னையில் விற்பனை செய்து வந்தவர் கைது. காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (40) கைதான நிலையில், அவரிடம் இருந்து 187 காத்தாடி, 72 மாஞ்சா நூல் ஆகியவை பறிமுதல்.

9.குமரியில் படகு சேவை நிறுத்தம்

கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம். விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள், படகுப் போக்குவரத்து செய்ய திரண்டிருந்த நிலையில் சேவை நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம்.

10.தமிழக அரசுக்கு சீமான் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலை திறந்து வழிபட அனுமதிக்காவிட்டால் ஆலய நுழைவு போராட்டம் செய்வோம் என தமிழக அரசுக்கு சீமான் எச்சரிக்கை.