டாப் 10 தமிழ் நியூஸ்: விஜய் நடத்தும் இஃப்தார் நோன்பு முதல் தக்கோலத்தில் அமித்ஷா வரை!
22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க சொல்லும் ஸ்டாலின், தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை நிகழ்ச்சியில் அமித்ஷா, விஜய் நடத்தும் இஃப்தார் நோன்பு, தீவிரம் அடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்குக
திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல; வலிந்து திணிக்கப்படும் மொழிகளையே எதிர்க்கிறது. இந்தி ஆதிக்கத்தில் இருந்து இந்திய மொழிகளை காப்பது திராவிட இயக்கத்தின் கொள்கைதான். தாய் மொழியை காக்க தமிழகம் போட்டுத்தந்த பாதையே பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன. தமிழ் உட்பட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
2.தக்கோலத்தில் அமித்ஷா
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் அமைந்து உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56ஆவது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உள்ளார். மத்திய தொழில் பாதுகாப்பு படை தின அணிவகுப்பு மரியாதையையும் அமித்ஷா ஏற்றுக் கொண்டார்.
3.விஜய் நடத்தும் இஃப்தார் நோன்பு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1500 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க:- ’மீண்டும் மீண்டுமா? செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!’
4.சாம்சங் ஊழியர்கள் போராட்டம்
சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொழிற்சங்க ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னார். சாம்சங் நிர்வாகத்தின் நிபந்தனை கடிதத்தில் கையெழுத்திட மறுத்து போட்டி கடிதத்துடன் வந்த ஊழியர்கள்; பணிக்கு வர தயாராக உள்ளேன் என்ற கடிதத்துடன் சாம்சங் தொழிலாளர்கள் ஆலை முன்பு குவிந்து உள்ளனர்.
5.நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது. 2025-26ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.
6.பாம்பன் மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்ததாக ஒரு விசைப்படகுடன் 14 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
7.தீட்சிதர்கள் குழந்தை திருமணம்- காவல்துறை எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2 தீட்சிதர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் படிக்க:- தமிழ்நாட்டில் 100ஆக உயரும் மரகதப் பூஞ்சோலைகள்! மேலும் 5 மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யும் தமிழ்நாடு அரசு!
8.ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன். மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராகவும் அறிவுறுத்தல். அப்போதைய பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
9.தடையற்ற மின் விநியோகம் - மின்வாரியம் உத்தரவு
கோடைக்காலம், பட்ஜெட் கூட்டத்தொடர், பொதுத்தேர்வு போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
10.குற்றங்கள் எண்ணிக்கை குறைவு
2013ஆம் ஆண்டை ஒப்பீடு செய்கையில் 2024ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை வழக்குகள் குறைந்து உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது. ஆதாயக் கொலைகளின் வழக்குகளின் எண்ணிக்கை 10%, கூட்டுக் கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17%, கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17% குறைந்து உள்ளது.
