டாப் 10 தமிழ் நியூஸ்: பூதாகரமாகும் செங்கோட்டையன் விவகாரம் முதல் ஹைப்பர் லூப் சோதனை வரை!
மாநில சுயசார்பு குறித்து முதலமைச்சர் பேச்சு, சரியான பாதையில் செல்வதாக செங்கோட்டையன் பேட்டி, செங்கோட்டையனுக்கு வைகை செல்வன் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.மாநில சுயசார்பை உறுதி செய்க
அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மாநில அரசுகளின் சுய சார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
2.சரியான பாதையில் செல்கிறேன்
எந்த பாதை சரியாக இருக்கிறதோ, அந்த பாதையில் நான் சென்று கொண்டு இருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது. வெற்றி முடிவானது. சில வேடிக்கை மனிதர்களை போல் நான் விழுந்து விடமாட்டேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு.
3.செங்கோட்டையனுக்கு கண்டனம்
செங்கோட்டையன் பொது வெளியில் இது போல் நடந்து கொள்வது அநாகரீக செயல். தொண்டர்களால் இயங்கும் அதிமுகவில் ஒரு சில கசப்பும், கருத்து வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்யும். அதிமுகவை விட்டு கருத்து வேறுபாட்டால் போனவர்கள் காணாமல் போய்விட்டனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கருத்து.
4.முதல்வர் சிறை செல்வது உறுதி
"டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் கெஜ்ரிவால் போல, செந்தில் பாலாஜியும் அவரை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் சிறை செல்வது உறுதி" - தம்பிதுரை பேச்சு.
5.ஹைப்பர் லூப் சோதனை ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ஐஐடி நிறுவி உள்ள 410 மீட்டர் நீள ஹைப்பர் லூப் சோதனையை பாதையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
6.தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் வேண்டும்
லோகோ பைலட் தேர்வு எழுதும் தமிழ்நாட்டின் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு மையங்களை மாற்றக் கோரி ரயில்வே துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம்.
7.விஜய் பாதுகாப்பு குறித்து சீமான் கருத்து
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்குவதில் தவறு இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
8.அண்ணாமலை மீது அமைச்சர் விமர்சனம்
விலாசமற்ற மற்றும் மக்களின் ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை. எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த தலைவர் எனில் அது அண்ணாமலைதான் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.
9.கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய மாநிலம்
இந்தியாவிலேயே ஒட்டுமொத்தமாகக் கல்விக்கு என ரூ.55,000 கோடியை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடுதான் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்.
10.சிரார்களின் பெற்றோர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 சிரார்கள் இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்ட நிலையில், அவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

டாபிக்ஸ்