டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் முதல் டாஸ்மாக்கில் 1000 கோடி முறைகேடு புகார் வரை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் முதல் டாஸ்மாக்கில் 1000 கோடி முறைகேடு புகார் வரை

டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் முதல் டாஸ்மாக்கில் 1000 கோடி முறைகேடு புகார் வரை

Kathiravan V HT Tamil
Published Mar 14, 2025 08:46 AM IST

தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல், மகளிர் உரிமை தொகை பயணாளிகள் அதிகரிக்க வாய்ப்பு, 10ஆம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு, டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்  முதல் டாஸ்மாக்கில் 1000 கோடி முறைகேடு புகார் வரை
டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் முதல் டாஸ்மாக்கில் 1000 கோடி முறைகேடு புகார் வரை

1.தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் 

2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். நாளை காலை வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். 

2.பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கை உயர்வு, மகளிர் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இன்றைய தினம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு. 

3. பட்ஜெட் லோகோவில் இந்திய ரூபாய் குறியீடு மாற்றம்!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள லோகோவில் இந்திய ரூபாய் குறியீட்டை குறிக்கும் -க்கு பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ என்ற எழுத்து இடம்பெற்று உள்ளது. 

மேலும் படிக்க:- இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் திமுக எம்.எல்.ஏவின் மகன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

4.டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி முறைகேடு 

டாஸ்மாக் நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து உள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு. 

5.டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ள நிலையில், வரும் மார்ச் 17ஆம் தேதி அன்று சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு. 

6.இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

மேலும் படிக்க:- ’சகோதரரையே கண்டுபிடிக்க முடியாதவரா நிலக்கரி முறைக்கேட்டை கண்டுபிடிப்பார்?’ செந்தில் பாலாஜியை கலாய்க்கும் கே.எஸ்.ஆர்

7.இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

8.கச்சத்தீவு தேவாலய திருவிழா தொடக்கம் 

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. கச்சத்தீவின் வருடாந்திர திருவிழா, தவக்கால யாத்திரை இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. 

9.மத்திய அரசு மீது அமைச்சர் புகார்

மக்கள் வரிப்பணத்தை வாங்கி வடமாநிலங்களில் கோடி கோடியாக செலவிட்டு கோயில் கட்டுகிறார்கள். வடமாநிலங்களில் படிப்பதற்கு கொடுக்கப்படும் பணத்தை வைத்து  கோயில் கட்டுகின்றனர். பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசு நமது பணத்தை கொள்ளையடித்து வடமாநிலங்களுக்கு கொடுக்கிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கருத்து.

10. 10ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு 

10.ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.