டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் முதல் மத்திய அரசை விளாசும் விஜய் வரை!
தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல், மத்திய அரசுக்கு முதலமைச்சர் கண்டனம், நிர்மலா சீதாராமனுக்கு விஜய் கேள்வி, மு.க.ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.நாளை பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
2.மத்திய அரசுக்கு முதலமைச்சர் கண்டனம்
எங்களிடமே வரி வசூலித்துவிட்டு எங்களை சிறுமைபடுத்துவதுதான் நாகரீகமா?; அநாகரீகத்தின் அடையாளமே மத்திய அரசுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
3.முதலமைச்சருக்கு ஈபிஎஸ் சவால்
மேடையில் வீரவசனம் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன ஆட்சி செய்தார் என தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்.
4.நிர்மலா சீதாராமனுக்கு விஜய் கேள்வி
மத்திய அரசு மீதான விமர்சனங்களை மறைப்பதற்கு கூட பெரியார் குறித்த சர்ச்சை கிளப்பப்படுகிறது. பெரியார் கூறியது வருத்தமெனில் மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் இருக்கலாமே என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி.
5.ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி, இரு மகன்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக தற்கொலை நடந்து இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
6.சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை
கோவையில் ஒபங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொக்கலிங்கம் தற்கொலை குறித்து பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7.தமிழ்நாட்டை காப்போம்- எஸ்.எஸ்.சிவசங்கர்
தமிழ்நாடு என்ற வீட்டையே இடைக்க பாஜக துடிக்கிறது. பாஜகவுக்கு துணைபோகும் வகையில் செயல்படும் கட்சிக்கு புத்தி சொல்லி தமிழ்நாட்டை காப்பாற்றுவோம் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.
8.தமிழுக்கு பெருமை சேர்க்கும் மோடி
தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். இந்தியாவில் நவோதயா பள்ளிகள் இல்லாத மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் 9.5 லட்சம் கோடி கடன் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்.
9.வடநாட்டு அமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம்
மத்திய அரசு சொன்னதை பின்பற்றி தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைக்கப்பட்டது. வடநாட்டுக்காரர்களுக்கு வேறு வேலையின்றி பிள்ளையை பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். எங்களை பார்த்து நாகரீகமற்றவர்கள் என்று வடநாட்டு அமைச்சர் பேசுவதா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
10.சென்னையில் கார் வாங்க புதிய விதி விரைவில் அமல்
சென்னையில் புதிதாக கார் வாங்குபவர்கள் அதனை பதிவு செய்ய வேண்டுமென்றால், தனது வீட்டிலோ அல்லது தனியார் இடத்திலோ காரை நிறுத்துவதற்ஆன இடம் உள்ளது என்பதற்கான ஆதரத்தை சமர்பிக்க வேண்டும் என்ற விதி விரைவில் அமலாக உள்ளதாக தகவல்.

டாபிக்ஸ்