தலைப்பு செய்திகள்: ஈரோடு இரட்டை கொலை முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: ஈரோடு இரட்டை கொலை முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்: ஈரோடு இரட்டை கொலை முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Published May 19, 2025 09:48 AM IST

”ஈரோடு இரட்டை கொலை வழக்கு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, தமிழ் கலாச்சாரம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு, தவெக கூட்டணி குறித்து நிர்மல் குமார் பேச்சு, 2026 தேர்தலில் நாதக தனித்து போட்டி என சீமான் அறிவிப்பு”

தலைப்பு செய்திகள்: ஈரோடு இரட்டை கொலை முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தலைப்பு செய்திகள்: ஈரோடு இரட்டை கொலை முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

1.ஈரோடு இரட்டை கொலை - 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி அருகே தோட்டத்து வீட்டில் நகைகளுக்காக முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகியோரை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டார்.

2.18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

3.நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாட்டில் நாளை வரை கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்றிரவு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து உள்ளது.

4.கலாச்சாரத்தை பாதுகாக்காதது ஏன்?

தமிழ்க்கலாச்சாரத்தை பாதுகாப்பதாக கூறும் அரசியல் கட்சிகள் அதற்காக என செய்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார். கலாச்சாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்றும் தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் பேச்சு.

5.’விஜய் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்’

பாஜக-திமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் ஏற்கெனவே அறிவித்துவிட்டார் என தமிழிசை சௌந்தராஜன் கருத்துக்கு தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் பதில்.

6.தென்மேற்கு பருவமழை - முதல்வர் ஆலோசனை 

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்பு.

7.நாதக தனித்தே போட்டி 

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். 234 தொகுதிகளில் 117 இடங்களில் ஆண்களும், மீதமுள்ள 117 இடங்களில் பெண்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.

8.இந்திரா இருந்து இருந்தால் ஈழம் மலரும்

இந்திரா காந்தி உயிரோடு இருந்து இருந்தால் தனி ஈழம் மலந்து இருக்கும். இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தமிழர்களின் கோரிக்கையை கேட்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு மோடி துரோகம் செய்துவிட்டார் என சென்னையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு.

9.காரில் தீ

மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் ஏவி பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த காரில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு. நல்வாய்ப்பாக காரில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள், கார் முழுவதும் தீயில் எரிந்து நாசம். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

10.திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் 

“திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரே புள்ளியில் இணைய வேண்டும்” என திருச்சியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.