டாப் 10 தமிழ் நியூஸ்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் முதல் விஜயின் தவெக பொதுக்குழு வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டாப் 10 தமிழ் நியூஸ்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் முதல் விஜயின் தவெக பொதுக்குழு வரை!

டாப் 10 தமிழ் நியூஸ்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் முதல் விஜயின் தவெக பொதுக்குழு வரை!

Kathiravan V HT Tamil
Published Mar 28, 2025 09:26 AM IST

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம், தவெக கட்சி பொதுக்குழு தொடக்கம், புஸ்ஸி ஆனந்த் பெயரில் சர்ச்சை போஸ்டர், சென்னை - பெங்களூரு அணிகள் மோதல், சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

டாப் 10 தமிழ் நியூஸ்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் முதல் விஜயின் தவெக பொதுக்குழு வரை!
டாப் 10 தமிழ் நியூஸ்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் முதல் விஜயின் தவெக பொதுக்குழு வரை!

1.10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் இத்தேர்வை 9.13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

2.இன்று தவெக பொதுக்குழு 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3.வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்தா? 

தவெக கட்சியின் பொதுக்குழு இன்று நடைபெறும் நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தை வருங்கால முதலமைச்சர் என சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈ.சி.ஆர்.சரவணன் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

4.போஸ்டர் சர்ச்சை - ஈசிஆர் சரவணன் மறுப்பு

“எனக்கும் அந்த போஸ்டருக்கும் சம்பந்தம் இல்லை; வேறு கட்சியை சேர்ந்தவர்கள் யாராவது இதை செய்து இருக்கலாம். வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்” என சர்ச்சை போஸ்டர் குறித்து தவெக சென்னை புறக்நர் மாவட்ட செயலாளர் ஈ.சி.ஆர்.பி.சரவணன் விளக்கம்.

5.இன்றைய மானியக் கோரிக்கை விவாதம் 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கதர் கிராமத் தொழில்கள், வனம், கைத்தறி மற்றும் துணிநூல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகிறது. 

6.சென்னை- பெங்களூரு அணிகள் பலப்பரிட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்.

7.பொன்.ராதா ’எக்ஸ்’ கணக்கு ஹேக் 

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் ’எக்ஸ்’ வகைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது. கணக்கை விரைவில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்.

8.மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் தந்தை மறைவு

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். இறுதி மரியாதை நிகழ்வுகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

9.மக்கள் மீட்புக் கழக தலைவர் கைது 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே மதுபோதையில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மக்கள் மீட்புக் கழகம் என்ற அமைப்பின் தலைவரான செந்தில் கைது செய்யப்பட்டார். 

10.பைக் ரேஸ் - வாகனங்கள் பறிமுதல் 

சென்னை அண்ணாநகர், அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இருந்து 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிசிடிவி கேமராக்களில் சிக்கி கொள்ளாமல் இருக்க நம்பர் பிளேட்களில் துணை வைத்து மறைத்ததும், கழட்டி வைத்தும் பைக் ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.