தலைப்பு செய்திகள்: பள்ளிகள் மீண்டும் திறப்பு முதல் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிப்பு வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: பள்ளிகள் மீண்டும் திறப்பு முதல் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிப்பு வரை!

தலைப்பு செய்திகள்: பள்ளிகள் மீண்டும் திறப்பு முதல் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிப்பு வரை!

Kathiravan V HT Tamil
Published Jun 02, 2025 09:36 AM IST

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தீர்ப்பு, மழை எச்சரிக்கை, திமுக பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: பள்ளிகள் மீண்டும் திறப்பு முதல் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிப்பு வரை!
தலைப்பு செய்திகள்: பள்ளிகள் மீண்டும் திறப்பு முதல் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிப்பு வரை!

1.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு 

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு, விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு இன்றே நோட்டு, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்க ஏற்பாடு.

2.ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு.

3.அரசியல் தலையீடு இல்லை 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரக்கோணம் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அரசியல் தலையீடு என்பது முற்றிலும் இல்லை என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்.

4.மழை எச்சரிக்கை 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல்நேர வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் ஜூன் 5ஆம் தேதி வரை இரவு நேரங்களில் இடி, மின்னல் உடன் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் கணிப்பு. 

5.ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு 

வரும் ஜூன் 4ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிப்பு. அன்றைய தினம் அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் பின்னர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6.பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு, காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு. கைக்குழந்தை உடன் உள்ள தாய் மார்களுக்கு காய்ச்சிய பாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

7.எந்த ஷா வந்தாலும் ஆள முடியாது 

"எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது; டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் கட்டுப்படாது. திமுகவை எந்த கோமாளி கூட்டத்தாலும் வெல்ல முடியாது; சூரியனைப் போல திமுகவும் அதன் ஆட்சியும் நிரந்தரம்" என மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

8.திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம் 

திமுக பொதுக்குழு தீர்மானத்தில் "துரோக அதிமுக" என பயன்படுத்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். "அதிமுக யாருக்கும் துரோகம் செய்யவில்லை; திமுகவே நாட்டிற்கு துரோகம் இழைத்துள்ளது" என விமர்சனம்.

9.கன்னியாகுமரி மீன்பிடி தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்பட்டினம், முட்டம் உள்ளிட்ட மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும்.

10.புகையிலை விற்பனை - 18,409 கடைகளுக்கு சீல் 

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளை புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 18,409 கடைகளுக்கு சீல் வைத்து பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.