தலைப்பு செய்திகள்: ’ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் பேரணி முதல் மின் நிலையங்களில் போர் ஒத்திகை வரை!’ முக்கிய செய்திகள்!
வடசென்னை, கூடங்குளத்தில் போர் ஒத்திகை, இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நாளை பேரணி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் இன்று திறப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.மின் நிலையங்களில் போர் சூழல் ஒத்திகை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உண்டாகி உள்ள நிலையில், வடசென்னை அனல் மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையங்களில் நாளை மாலை போர் சூழல் ஒத்திகை நடைபெறும் என அறிவிப்பு.
2.இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நாளை பேரணி
தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது. நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
