டாப் 10 தமிழ் நியூஸ்: சென்னை வந்த கேரள முதல்வர் முதல் போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டாப் 10 தமிழ் நியூஸ்: சென்னை வந்த கேரள முதல்வர் முதல் போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் வரை!

டாப் 10 தமிழ் நியூஸ்: சென்னை வந்த கேரள முதல்வர் முதல் போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் வரை!

Kathiravan V HT Tamil
Published Mar 21, 2025 09:48 AM IST

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு, சென்னை வந்தார் கேரள முதலமைச்சர், பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

டாப் 10 தமிழ் நியூஸ்: சென்னை வந்த கேரள முதல்வர் முதல் போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் வரை!
டாப் 10 தமிழ் நியூஸ்: சென்னை வந்த கேரள முதல்வர் முதல் போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் வரை!

1.மாநிலங்களை அவமதிக்கும் செயல்

மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தண்டனை வழங்க கூடாது. இது மாநிலங்களை அவமதிக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

2.சென்னை வந்த கேரள முதல்வர்

தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்பு.

3.பூந்தமல்லி-போரூர் மெட்ரோ 

சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பூந்தமல்லி பணிமனை - முல்லைத் தோட்டம் இடையே 2.5 கி.மீ. தூரத்திற்கு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி - போரூர் இடையே வரும் டிசம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது.

4.71.5 லட்சம் பறிமுதல் 

கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்தில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 71.5 லட்சம் பணத்தை கேரள போதை தடுப்பு போலீசார் பறிமுதல்.

5.வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு 

வடசென்னை அனல்மின் நிலைய செயல்பாடுகள், உற்பத்தி திறன், நிலக்கரி கையாளும் பணிகள், இருப்பு விவரங்கள் குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

6.வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி 

சென்னை கொரட்டூரில், தமிழ்நாடு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல பேரிடம் இருந்து ரூ. 62.8 லட்சம் பண மோசடி செய்த டில்லிகுமார், மகேஷ் ஆகியோரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பணம் கொடுத்தவர்களை நம்ப வைப்பதற்காகப் போலி பணி நியமன ஆணைகளைக் கொடுத்து ஏமாற்றியது விசாரணையில் அம்பலம். பணத்தை மீட்டுத் தருமாறும் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

7.ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு 

சென்னை அடுத்த கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடி தூத்துக்குடி ஹைக்கோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். கைது செய்ய சென்ற போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் தற்காபிற்காக சுட்டனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. 

8.பைக் திருடன் மரணம் 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் வீட்டுக்கு வெளியே நின்ற பைக்கை திருடிக் கொண்டு அதிவேகத்தில் சென்ற ஆறுமுகம் என்ற நபர் வேகத்தடையில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு.

9.600 கோடி நிதி ஒதுக்கீடு 

கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அரசாணை பிறப்பிப்பு.

10.ஆண் யானை சடலமாக மீட்பு 

நீலகிரி மாவட்டம், உதகை அருகே சிக்காரா லீக்வுட் எஸ்டேட் பகுதியில் 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சடலமாக கண்டெடுப்பு. உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என பிரேதப் பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் தகவல்.