டாப் 10 தமிழ் நியூஸ்: 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை முதல் மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை வரை!
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை, ரம்ஜானுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம், தமிழக அரசு மீது நிர்மலா சீதாராமன் விமர்சனம், நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதில் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று காலை 11 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2.ரவுடி வெட்டிக் கொலை
மதுரை மாவட்டம் மொட்டமலை பகுதிகளில் ரவுடி காளீஸ்வரன் மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.
3.ரம்ஜான் சிறப்பு ரயில்கள்
ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 27. 28. 32 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் - கன்னியகுமரி, தாம்பரம் - திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை செண்ட்ரல் - பெங்களூரு இடையே இரு மார்க்கங்களிலும் மார்ச் 28இல் சிறப்பு ரயில்கள் இயக்கபடும்.
4.நிர்மலா சீதாராமன் மீது குற்றச்சாட்டு
மக்களின் கவனத்தை திசை திருப்பவே மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்டவை பேசப்படுகிறது என தமிழ்நாடு அரசின் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.
5.நிர்மலா சீதாராமன் மீது கனிமொழி விமர்சனம்
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் எதிர்த்து போராடுகிறோம். தமிழ் மக்களை பழித்தவர்கள் நிலை குறித்து நிர்மலா சீதாராமன் நினைத்து பார்க்க வேண்டும் என கனிமொழி கருத்து.
6.வரி ஏய்ப்பு செய்த வணிகளுக்கு சிறை
திருவள்ளூரில் 12.46 கோடி வரி ஏய்ப்பு செய்த மோசடி புகாரில் தனியார் நிறுவன உரிமையாளர் ஜெயபிரகாஷ், பஷீர் அகமது ஆகியோர் சிறையில் அடைப்பு.
7.திருநெல்வேலியில் சாதி பிரச்னைகள் இல்லை
தமிழ்நாட்டில் சாதி பிரச்னைகள் இல்லை. குறிபாக திருநெல்வேலியில் அத்தகைய பிரச்னைகள் இல்லை என சபாநாயகர் அப்பாவு பேட்டி.
8.தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு
தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிர்ச்சி தகவல்.
9.பிரதமரை சந்திக்க திட்டம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத் தொடரிலேயே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து எம்.பிக்கள் குழு மனு அளிக்க கூட்டுக் குழு கூட்டத்தில் முடிவு.
10. பிரதமருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் தனி விமானத்தில் பாதுகாப்புடன் வெளிநாடு செல்வதில் தவறேதும் இல்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டி.

டாபிக்ஸ்