இன்றைய தலைப்பு செய்திகள்: பாஜக-தவெக கூட்டணி முதல் வெப்பநிலை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் பேச்சு, பாஜக-தவெக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி, கடன் வசூல் ஒழுங்கு மசோதா பேரவையில் நிறைவேற்றம், தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

இன்றைய தலைப்பு செய்திகள்: பாஜக-தவெக கூட்டணி முதல் வெப்பநிலை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
1.திமுக கூட்டணி வெற்றி உறுதி
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தல் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.
2.பாஜக-தவெக கூட்டணியா?
பாஜக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்பதாக எனக்கு தெரியவில்லை. நேற்று மோடியை சந்தித்தேன். இன்று உங்களை சந்திக்கிறேன். நாளை கோட்டையில் சந்திப்போம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
3.சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்
கடன் வசூல் ஒழுங்கு மசோதா, மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் நியமன மசோதா உள்ளிட்ட 18 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டு சிறை அல்லது 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.